CPL தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு

Caribbean Premier League 2023

669

மேற்கிந்திய தீவுகளில் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடருக்காக இலங்கை அணியின் 4 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த ஆண்டுக்கான CPL வீரர்கள் வரைவு நடைபெற்று முடிந்துள்ளதுடன், இலங்கை அணியைச் சேர்ந்த மதீஷ பதிரண, பானுக ராஜபக்ஷ, மஹீஷ் தீக்ஷன மற்றும் தசுன் ஷானக ஆகியோர் தொடரில் இணைக்கப்பட்டுள்ளனர். 

நெதர்லாந்துக்கு எதிராக த்ரில் வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி

IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக பிரகாசித்த வேகப்பந்துவீச்சாளரும், உலகக்கிண்ண தகுதிகாண் குழாத்தில் இடம்பெற்றுள்ளவருமான மதீஷ பதிரணவை டிரின்பகோ நைட் ரைடர்ஷ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. 

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டுவைன் பிராவோ, டிரின்பகோ நைட் ரைடர்ஷ் அணியில் விளையாடவுள்ளதுடன், இவருடன் மதீஷ பதிரண மீண்டும் இணைந்துள்ளார். மதீஷ பதிரணவை அடுத்து இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன பார்படோஸ் றோயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

மேற்குறித்த இரண்டு வீரர்களை தவிர்த்து இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

CPL தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் 4ம் திகதி முதல் செப்டம்பர் 25ம் திகதி முதல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<