Home Tamil அதிரடி வெற்றியோடு T20 தொடரினை சமப்படுத்திய பங்களாதேஷ்

அதிரடி வெற்றியோடு T20 தொடரினை சமப்படுத்திய பங்களாதேஷ்

82

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான T20I தொடரின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது.

>>The Hundred வீரர்கள் ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

இன்று (06) பங்களாதேஷின் சில்லேட் நகரில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியானது முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தனர். இலங்கைத் தரப்பில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் குசல் மெண்டிஸ் 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளோடு 36 ஓட்டங்கள் பெற்றார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் சௌம்யா சர்க்கார், முஸ்தபிசுர் ரஹ்மான், மஹேதி ஹஸன் மற்றும் தஸ்கின் அஹ்மட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 166 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 170 ஓட்டங்களுடன் அடைந்தது.

>>எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கும் 117ஆவது வடக்கின் பெரும் சமர்!

பங்களாதேஷின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் அதன் தலைவர் நஜ்முல் ஹொசைன் அரைச்சதம் விளாசியிருந்ததோடு 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகளோடு ஆட்டமிழக்காது 53 ஓட்டங்கள் பெற்றார். அத்துடன் இது அவரின் நான்காவது T20I அரைச்சதமாகவும் பதிவானது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மதீஷ பதிரன 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக நஜ்முல் ஹொசைன் தெரிவானார்.

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான T20I தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி சனிக்கிழமை (09) இரண்டாது போட்டி இடம்பெற்ற அதே சில்லேட் மைதானத்தில் நடைபெறுகின்றது.  இந்தப் போட்டியினையும் இலங்கை அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் விளையாடும் அனைத்துப் போட்டிகளையும் ThePapare TV அலைவரிசை ஊடாக Dialog TV (அலைவரிசை எண். 63) இல் நேரடியாக கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result


Bangladesh
170/2 (18.1)

Sri Lanka
165/5 (20)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Taskin Ahmed b Taskin Ahamed 0 7 0 0 0.00
Kusal Perera c Liton Das b Soumya Sarkar 36 22 2 3 163.64
Kamindu Mendis run out (Mahedi Hasan) 37 27 3 2 137.04
Sadeera Samarawickrama c & b Mustafizur Rahman 7 11 0 0 63.64
Charith Asalanka b Mahedi Hasan 28 14 1 3 200.00
Angelo Mathews not out 32 21 4 0 152.38
Dasun Shanaka not out 20 18 1 1 111.11


Extras 5 (b 0 , lb 0 , nb 0, w 5, pen 0)
Total 165/5 (20 Overs, RR: 8.25)
Bowling O M R W Econ
Shoriful Islam 4 1 20 0 5.00
Taskin Ahmed 4 0 38 1 9.50
Mahedi Hasan 4 0 39 1 9.75
Mustafizur Rahman 4 0 42 1 10.50
Rishad Hossain 3 0 21 0 7.00
Soumya Sarkar 1 0 5 1 5.00


Batsmen R B 4s 6s SR
Liton Das c Charith Asalanka b Matheesha Pathirana 36 24 5 1 150.00
Soumya Sarkar c Angelo Mathews b Matheesha Pathirana 26 22 5 0 118.18
Najmul Hossain Shanto not out 53 38 4 2 139.47
Towhid Hridoy not out 32 25 2 1 128.00


Extras 23 (b 4 , lb 6 , nb 0, w 13, pen 0)
Total 170/2 (18.1 Overs, RR: 9.36)
Bowling O M R W Econ
Angelo Mathews 2.2 0 22 0 10.00
Dilshan Madushanka 4 0 34 0 8.50
Binura Fernando 3 0 22 0 7.33
Maheesh Theekshana 4 0 35 0 8.75
Matheesha Pathirana 3.4 0 28 2 8.24
Dasun Shanaka 1.1 0 19 0 17.27



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<