பாகிஸ்தான் சென்று விளையாடாதது மகிழ்ச்சியளிக்கிறது – லசித் மாலிங்க

44

பாகிஸ்தான் தொடரில் தான் விளையாடாததால் தான் இலங்கை டி-20 அணிக்கு ஒரு புதிய தலைவர் ஒருவர் இனங்கண்டு கொள்ள முடிந்ததாகத் தெரிவித்த இலங்கை டி-20 அணியின் தலைவர் லசித் மாலிங்க, தான் அந்தத் தொடரில் விளையாடாதது ஒருவகையில் நல்லது என்றும் முழு மனதாக திருப்தி அடைவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதேநேரம், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரானது அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும் என தெரிவித்த மாலிங்க, கிரிக்கெட்டில் திறமையைப் போல புத்திசாலித்தனமும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை இளையோர் குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் சென்று இளையோர் ஒருநாள் மற்றும் இளையோர் டெஸ்ட் தொடர்களில்…

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி எதிர்வரும் 21ஆம் திகதி அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளது.

இந்த நிலையில், குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள லசித் மாலிங்க தலைமையிலான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் நேற்றுமுன்தினம் (17) அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கை வீரர்கள் கலந்துகொண்ட விசேட சமய வழிபாடுகள் நேற்று இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை டி-20 அணியின் தலைவர் லசித் மாலிங்க, பாகிஸ்தான் தொடரில் பங்கேற்க முடியாமல் போனதற்கான காரணத்தை வெளியிட்டார். அவர் அதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

பாகிஸ்தானுடனான டி20 தொடருக்கு ஒரு புதிய அணித் தலைவரை, இளம் வீரர்கள் கொண்ட ஒரு அணியை தெரிவு செய்ய கிடைத்தமை எமது முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். அதிலும், நான் அந்தத் தொடரில் பங்குபற்றாததாலேயே ஒரு புதிய அணித் தலைவர் ஒருவரை நியமிக்க முடிந்தது.

அத்துடன், அந்தத் தொடருக்காக நான் உட்பட இன்னும் 3 வீரர்கள் தான் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. மற்றைய அனைத்து வீரர்களும் இளம் வீரர்கள் தான். எனவே இந்த வெற்றியை நாங்கள் அடுத்து வரும் தொடர்களிலும் நிரூபித்துக் காட்ட வேண்டும். 

நான் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். இப்போது டி-20 போட்டிகளில் மாத்திரம் இலங்கை அணிக்காக ஒரு சிறிய காலம் விளையாடி வருகிறேன். அதுவும் மிக விரைவில் நிறைவுக்கு வந்துவிடும். 

இதனால் தான் நான் தலைவர் பதவியைப் பெறுப்பேற்ற போது யார் அணித் தலைமையை ஏற்றாலும் அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு பலமிக்க அணியொன்றை உருவாக்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்து கூறியிருந்தேன். 

உண்மையில், பாகிஸ்தான் தொடரில் நான் விளையாடாததால் தான் டி-20 அணிக்கு ஒரு புதிய தலைவர் ஒருவர் கிடைத்தது என சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதுவும் வரவேற்கத்தக்க விடயமாகும். எனவே நான் அந்தத் தொடரில் விளையாடாதது ஒருவகையில் நல்லது என்று கருதுவதுடன் முழு திருப்தியும் அடைகிறேன்.

T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ள, அணிக்கு பத்து…

எது எவ்வாறாயினும், அணியை எவர் வழிநடத்தினாலும் போட்டியொன்றை வெற்றி கொள்ள திறமை மாத்திரம் போதாது. அணியில் இடம்பெற்றுள்ள 11 வீரர்களில் 7 பேராவது புத்திசாலித்தனமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

இதேநேரம், ஆஸி.யுடனான டி-20 தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இலங்கை அணி குறித்து திருப்தி அடைகின்றீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மாலிங்க பதிலளிக்கையில்,

நிச்சயமாக, உலகின் முதல் நிலை டி-20 அணியான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய அணியில் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்கள் இந்தக் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். அவர்களுடன் நானும் இணைந்து கொள்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

Photos : Sri Lanka Team departure for Australia T20I series

ThePapare.com | Viraj Kothalawala | 18/07/2019 Editing…

அத்துடன், இறுதியாக நியூசிலாந்துடனான டி-20 தொடரில் பிரகாசித்திருந்த குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய மூன்று வீரர்களும் மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்தத்தில் பார்க்கும் போது பலமிக்க அணியொன்று தான் எனக்கு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

இதனிடையே, பாகிஸ்தான் தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்டு தொடரைக் கைப்பற்றிய நிலையில், மாலிங்கவின் ஓய்வு நெருங்கிவிட்டதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாலிங்க,

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது என்பது எனக்கு பொருட்டல்ல. எனக்கு விருப்பமான நேரத்தில் தான் நான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றேன். 

அதேபோன்றுதான் டி-20 போட்டியிலும் ஓய்வு பெறுவேன். இங்கு ஒரு விடயத்தை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இளம் வீரர்கள் பிரகாசிக்கும் போது லசித் மாலிங்க ஓய்வு பெறாமலிருப்பது பெரும்பாலானோருக்கு பிரச்சினையாக இருக்கலாம். 

உதாரணமாக, தற்போது இலங்கை அணியில் உள்ள இளம் வீரர்களை எடுத்துக் கொண்டால் தசுன் ஷானக்க, ஷெஹான் ஜயசூரிய போன்ற வீரர்கள் 2013ஆம் ஆண்டு டி-20 கிரிக்கெட்டின் மூலம் தான் அறிமுகமானார்கள். அப்போது நான் அவர்களுக்கு வாய்ப்பளித்த போது அனைவரும் என்னை விமர்சித்ததனர். 

ஆஸி. தொடருக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இம்மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I…

ஏன்னுடன் காணப்படுகின்ற தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக முக்கிய வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர். இது ஆறு வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். இப்போது ஆறு வருடங்கள் கடந்த நிலையில், லசித் மாலிங்கவை விட இளம் வீரர்களே சிறந்தவர்கள் என நீங்கள் தீர்மானித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. 

நீங்கள் இன்று உணர்வதை நான் ஆறு வருடங்களுக்கு முன்னரே உணர்ந்துவிட்டேன் என்பதை தற்போது ஒரு அணித் தலைவராக மகிழ்ச்சி அடைகிறேன். 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி அடிலெய்ட் ஓவல் மைதானத்திலும், இரண்டாவது போட்டி 30ஆம் திகதி பிரிஸ்பேன் கபா மைதானத்திலும், மூன்றாவது போட்டி நவம்பர் முதலாம் திகதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது. 

இதற்குமுன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணியுடனான பயிற்சிப் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி கென்பராவில் நடைபெறவுள்ளது. 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<