T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது!

76

ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ள, அணிக்கு பத்து ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட T10 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கையைச் சேர்ந்த 7 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

த ஹன்ரட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 24 இலங்கை வீரர்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் சபை, அணிக்கு 100 பந்துகள் …….

சர்வதேச கிரிக்கெட்டில் ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டிகள் மீதான அவதானம் இரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்து வருகின்றது. அதிலும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் T10 போட்டித் தொடர் மிகவும் விறுவிறுப்பான போட்டித் தொடராக மாறியுள்ளது.

இந்த நிலையில், இம்முறை நடைபெறவுள்ள T10 லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதில், கடந்த வருடம் இலங்கை அணியின் 6 வீரர்கள் T10 அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், இம்முறை 7 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக, நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் தொடரில் பிரகாசித்திருந்த வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோர் இதில் இணைக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி வீரர்களான லசித் மாலிங்க, திசர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் பெரரா ஆகியோரும் அணிகளுக்காக வாங்கப்பட்டுள்ளனர். 

T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்தும் ….

இதில் லசித் மாலிங்க, தசுன் ஷானக மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய மூன்று வீரர்களும் மரதா அரேபியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை தவிர்த்து, நிரோஷன் டிக்வெல்ல டீம் அபுதாபி அணியிலும், திசர பெரேரா பங்ளா டைகர்ஸ் அணியிலும், பானுக ராஜபக்ஷ டெக்கன் க்ளேடியேட்டர்ஸ் மற்றும் குசல் பெரேரா டெல்லி புல்ஸ் ஆகிய அணிகளிலும் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற T10 தொடரில் டீம் ஸ்ரீலங்கா அணி விளையாடிய போது, பானுக ராஜபக்ஷ மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் குறித்த தொடரில் விளையாடியிருந்தனர். அதன்பின்னர், கடந்த ஆண்டு லசித் மாலிங்க, குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, திசர பெரேரா மற்றும் தசுன் ஷானக ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, கடந்த வருடம் கராச்சியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டிருந்த இலங்கை அணியின் சகலதுறை வீரர் இசுரு உதான இம்முறை எந்த அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<