Home Tamil ஆஸி.யில் முதல் T20I வைட்வொஷ்ஷினை சந்தித்த இலங்கை

ஆஸி.யில் முதல் T20I வைட்வொஷ்ஷினை சந்தித்த இலங்கை

72

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான T20I போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 3-0 என வைட்வொஷ் செய்துள்ளது.

மெல்பேர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி ஓசத பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, லஹிரு குமார மற்றும் செஹான் ஜயசூரிய என்ற நான்கு மாற்றங்களுடன் களமிறங்க, அவுஸ்திரேலிய அணி மிச்சல் ஸ்டார்க் மற்றும் பென் மெக்டெமோர்ட் ஆகிய இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது.

T20 தொடரை அவுஸ்திரேலியாவிடம் இழந்த இலங்கை கிரிக்கெட் அணி

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள்…

இலங்கை அணி 

குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாந்து, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, செஹான் ஜயசூரிய, பானுக ராஜபக்ஷ, ஓசத பெர்னாண்டோ, லக்ஷன் சந்தகன், நுவன் பிரதீப், லஹிரு குமார, லசித் மாலிங்க (அணித்தலைவர்)

அவுஸ்திரேலிய அணி

ஆரோன் பின்ச் (அணித்தலைவர்), டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித், பென் மெக்டெமோர்ட், அஷ்டன் ஏகார், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், அடம் ஷம்பா

இவ்வாறு மாற்றங்களுக்கு மத்தியில் அணிகள் களமிறங்கியதில், அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. இதன்படி, களமிறங்கிய இலங்கை அணி கடந்த இரண்டு போட்டிகளையும் போன்று தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

எனினும், குசல் பெரேரா அணிக்கான ஓட்டங்களை வலுப்படுத்தும் முகமாக அரைச் சதம் கடக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் கூறும் அளவிற்கு சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொடுக்கவில்லை. குசல் பெரேரா 57 ஓட்டங்களை அதிகமாக பெற்றுக்கொடுக்க, அவிஷ்க பெர்னாண்டோ 20 ஓட்டங்கள் மற்றும் பானுக ராஜபக்ஷ 17 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த ஓட்டக் குவிப்புக்களுக்கு மத்தியில் இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பொருத்தவரை மிச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ் மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Photos: Sri Lanka Vs Australia – 3rd T20I

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை கொடுத்த போதும், களத்தடுப்பில் விடப்பட்ட தவறுகள் காரணமாக அவுஸ்திரேலிய அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரின் பிடியெடுப்புகளை முறையே ஓசத பெர்னாண்டோ மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் தவறவிட்டனர். இதன் பின்னர் இவர்கள் இருவரும் ஓட்டங்களை குவிக்க, இலங்கை அணியின் வெற்றி பறிபோனது.

இதில், இந்த தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது அரைச் சதத்தை கடந்த டேவிட் வோர்னர் 57 ஓட்டங்களையும், ஆரோன் பின்ச் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, இறுதியாக வந்த அஸ்டன் டேர்னர் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார, நுவான் பிரதீப் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இன்றைய இந்த வெற்றியின் ஊடாக அவுஸ்திரேலிய அணி 2014ம் ஆண்டுக்கு பின்னர், முதன்முறையாக T20I  தொடர் ஒன்றை 3-0 என வைட்வொஷ் செய்து கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னர், 2014ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது.

இதேவேளை, இலங்கை அணி முதன்முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் T20I  தொடர் ஒன்றை இழந்துள்ளதுடன், முதன்முறையாக அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக 3-0 என வைட்வொஷ் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
142/6 (20)

Australia
145/3 (17.4)

Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Ben McDermott b Mitchell Starc 0 1 0 0 0.00
Kusal Mendis c Ben McDermott b Kane Richardson 13 18 0 1 72.22
Kusal Perera c Ashton Turner b Pat Cummins 57 45 4 1 126.67
Avishka Fernando c Ben McDermott b Pat Cummins 20 22 0 0 90.91
Oshada Fernando c  Alex Carey b Kane Richardson 6 4 1 0 150.00
Shehan Jayasuriya b Mitchell Starc 12 15 0 0 80.00
Bhanuka Rajapakse not out 17 11 0 0 154.55
Lasith Malinga not out 8 4 0 1 200.00


Extras 9 (b 0 , lb 8 , nb 0, w 1, pen 0)
Total 142/6 (20 Overs, RR: 7.1)
Fall of Wickets 1-3 (0.6) Niroshan Dickwella, 2-33 (4.4) Kusal Mendis, 3-76 (11.6) Avishka Fernando, 4-99 (14.2) Oshada Fernando, 5-110 (16.1) Kusal Perera, 6-132 (18.6) Shehan Jayasuriya,

Bowling O M R W Econ
Mitchell Starc 4 0 32 2 8.00
Kane Richardson 4 0 25 2 6.25
Pat Cummins 4 0 23 2 5.75
Ashton Agar 4 0 24 0 6.00
Adam Zampa 4 0 30 0 7.50


Batsmen R B 4s 6s SR
Aaron Finch c Shehan Jayasuriya b Lahiru Kumara 37 25 1 3 148.00
David Warner not out 57 50 3 1 114.00
Steve Smith c Lakshan Sandakan b Nuwan Pradeep 13 9 2 0 144.44
Ben McDermott lbw b Lasith Malinga 5 7 0 0 71.43
Ashton Turner not out 22 15 0 2 146.67


Extras 11 (b 0 , lb 5 , nb 0, w 6, pen 0)
Total 145/3 (17.4 Overs, RR: 8.21)
Fall of Wickets 1-69 (8.5) Aaron Finch, 2-85 (10.5) Steve Smith, 3-99 (12.5) Ben McDermott,

Bowling O M R W Econ
Lasith Malinga 4 0 22 1 5.50
Lahiru Kumara 4 0 49 1 12.25
Nuwan Pradeep 3.4 0 20 0 5.88
Shehan Jayasuriya 2 0 24 0 12.00
Lakshan Sandakan 4 0 25 0 6.25



>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<