இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் வழிகாட்டுதலுடன் (FFSL) மான்செஸ்டர் கால்பந்து அகடமியானது (MSA) அங்குரார்ப்பண Youth President’s Cup 2025 கால்பந்து தொடரினை ஒழுங்கு செய்திருக்கின்றது.
>>2024 இல் இலங்கையின் விளையாட்டுத்துறையில் நடந்தவை!<<
அந்தவகையில் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்த கால்பந்து தொடரில் மொத்தமாக இலங்கையின் 8 பிரபல கால்பந்து அகடமிகளின் அணிகள் பங்கேற்கவிருக்கின்றன.
இம்மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கும் இந்த கால்பந்து தொடரின் போட்டிகள் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி வரையில் நடைபெறவிருப்பதோடு, போட்டிகள் கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் மைதானம் மற்றும் பெத்தேகன கால்பந்து தொகுதி என்பவற்றில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
தொடரில் மான்செஸ்டர் SA, கொழும்பு கால்பந்து கழகம், சோன்டர்ஸ், ஜாவா லேன், பார்சிலோனா மற்றும் கொழும்பு யூத் ஆகிய முன்னணி அணிகள் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரினை ஒழுங்கு செய்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மான்செஸ்டர் அகடமியின் தலைமை அதிகாரியான ஜோர்ஜ் அகஸ்டின் இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர தாம் இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்தது சந்தோசம் தருகின்றது எனக் குறிப்பிட்டார்.
மறுமுனையில் இந்த கால்பந்து தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை கால்பந்து சம்மேளனம் வீரர்களின் திறன்களுக்கான தொடர்களுக்கு தமது ஆதரவு தொடர்ந்து இருக்கும் என சுட்டிக்காட்டியிருந்தார்.
>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<