அங்குரார்ப்பண மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்

142

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மகளிர் கிரிக்கெட் அணிகளுக்காக 2024ஆம் ஆண்டு தொடக்கம் 2027ஆம் ஆண்டு வரையில் ஒழுங்கு செய்திருக்கும் முன்னணி கிரிக்கெட் தொடர்களை நடாத்தும் நாடுகள் தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. 

“நிறுவனரீதியான இனவாதம்” – ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபை இராஜினாமா!

அதன்படி மொத்தம் 16 T20 போட்டிகள் கொண்டதாக முதன் முறையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் ICC இன் அங்குரார்ப்பண மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் 2027ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம் மொத்தம் ஆறு அணிகள் பங்குபெறவுள்ள இந்த மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை விளையாட வேண்டும் எனில், அதற்கான தகுதியை கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் இந்த தொடரினை இலங்கை நடாத்துவது தொடர்பிலும் மகளிர் கிரிக்கெட்டை விருத்தி செய்வதற்காக ICC உருவாக்கியுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பிலும் மகிழ்ச்சியடைவதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் நிறைவேற்று அதிகாரியான (CEO) ஏஷ்லி டி சில்வா குறிப்பிட்டிருக்கின்றார்.

SLC இன் புனர்வாழ்வு திட்டத்தை புறக்கணித்த குசல் பெரேரா

இதேவேளை 2024ஆம் ஆண்டுக்கான T20 மகளிர் உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. 2024ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் தொடக்கம் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் இடம்பெறும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கெடுக்கவுள்ளதோடு, மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம் இந்தியாவிலும், 2026ஆம் ஆண்டுக்கான T20 மகளிர் உலகக் கிண்ணம் இங்கிலாந்திலும் ஒழுங்கு செயய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் மொத்தம் 8 அணிகள் 31 போட்டிகளில் விளையாட இருப்பதோடு, T20 உலகக் கிண்ணத்தில் 12 அணிகள் மொத்தமாக 33 போட்டிகளில் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<t