2017இல் நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும் தென் ஆபிரிக்கா

210
SA announces NZ and England Tour

2017ஆம்  ஆண்டு ஆரம்பத்தில் தென் ஆபிரிக்க கிரிக்கட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

ஆக்லாந்தில் பிப்ரவரி 17ஆம் திகதி டி20 போட்டியுடன் தொடர் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் ஹாமில்டன் (19ஆம் திகதி), கிறிஸ்ட்சர்ச் (22ஆம் திகதி), வெலிங்டன் (25ஆம் திகதி), நேப்பியர் (மார்ச் 1ஆம் திகதி) மற்றும் ஆக்லாந்தில் (மார்ச் 4ஆம் திகதி) இடம்பெற உள்ளன.

டெஸ்ட் தொடர் மார்ச் 8ஆம் திகதி டுனெடினில் தொடங்குகிறது. 2வது போட்டி வெலிங்டனிலும் (மார்ச் 16 முதல் மார்ச் 20), 3-வது டெஸ்ட் ஹாமில்டனிலும் (மார்ச் 25 முதல் 29-ந்தேதி) நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து தென் ஆபிரிக்க அணி மே மாதம் இங்கிலாந்துக்கு செல்கிறது. அங்கு  24ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் சம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பின்னர் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. பின்னர், ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்