கிரான்ட் பிளவரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட்

India tour of Sri Lanka 2021

476

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரான கிரான்ட் பிளவரிடம், கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்திருக்கின்றது. 

மேலும் ஒரு இடம் முன்னேறிய வனிந்து ஹஸரங்க

இங்கிலாந்துக்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி அங்கே மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி இலங்கை வந்துள்ள நிலையில், இந்திய அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

எனினும் நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள அதன் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரான கிரான்ட் பிளவரிற்கு கொவிட்-19 வைரஸ்  தொற்று ஏற்பட்டிருப்பதாக கடந்த வாரம் கண்டறியப்பட்டிருந்தது. 

எனவே, கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான கிரான்ட் பிளவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் அவருக்குப் பதிலாக தம்மிக்க சுதர்ஷன இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக நியமனம் செய்யப்பட்டிருகின்றார்.  

இந்திய தொடருக்காக எதிர்பார்க்கப்படும் 5 விக்கெட் காப்பாளர்கள்!

ஆனால், கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் கொவிட்-19 வைரஸ் பாதுகாப்பிற்காக இலங்கை கிரிக்கெட் அணிக்கு போடப்பட்டுள்ள உயிர் பாதுகாப்பு வளையின் (Bio Bubble) விதிமுறைகளை மீறியதனாலேயே கிரான்ட் பிளவர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிடப்படுவதோடு அது தொடர்பான விசாரணைகள் இலங்கை கிரிக்கெட் சபை மூலம் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. 

”அவர் (கிரான்ட் பிளவர்) உயிர் பாதுகாப்பு வளையினை மீறியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.” 

“அவர் பூரணமாக குணமாகும் சந்தர்ப்பத்தில் (அது தொடர்பான) விசாரணைகள் இடம்பெறும்.”   

அதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகம் கிரான்ட் பிளவரின் பயிற்றுவிப்பு தொடர்பிலும் திருப்தி அடையவில்லை எனக் கூறப்பட்டுள்ளதோடு அவரின் ஒப்பந்தக்காலம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் நிறைவடைய முன்னர் அவர் பதவி விலக்கப்பட சாத்தியங்கள் உள்ளதாகவும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

இதேநேரம், கிரான்ட் பிளவர் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் தரவு ஆய்வாளர் ஆகிய இருவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்ட நிலையில் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த இலங்கை – இந்திய அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர்கள் 5 நாட்கள் தாமதமாகி எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<