இலங்கை அணியின் தேர்வாளர்களான சனத் ஜயசூரிய மற்றும் ஏனைய குழுவினர் இந்திய அணியுடன் இம்மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள T20 போட்டியில் விளையாடும் 15 பேர் அடங்கிய  இலங்கை குழாமின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

இக்குழாமில் T20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமைமிக்க வீரர்களான சீக்குகே பிரசன்ன, தசுன் சானக்க மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் காயத்தில் இருந்து மீண்டு தேசிய கடமையைப் பொறுப்பேற்றிருக்கும் பிரசன்ன இறுதியாக ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணியுடனான T20 தொடரில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் விக்கும் சஞ்சய இக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளார், அத்தோடு காயம் காரணமாக இந்திய அணியுடன் இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் போட்டிகளில் விளையாடாமல் போயிருந்த சுரங்க லக்மாலும் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

மேலும், அணியின் சுழல் பந்துவீச்சு துறையை வலுப்படுத்த வலதுகை சுழல் வீரரான ஜெப்ரி வன்டர்சேயிற்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை T-20 அணியில் மீண்டும் தசுன் சானக்க, இசுரு உதான

இம்மாதம் 6ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்திய..

இப்போட்டி நடைபெறும் மைதானம் இலங்கை அணிக்கு அவ்வளவு அதிர்ஷ்டமானதல்ல. ஆர். பிரேமதாச மைதானத்தில் இதுவரையில் 13 T20 போட்டிகளில் விளையாடியிருக்கும் இலங்கை அணி அதில் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது. இதில் 2012 ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை T20 குழாம்உபுல் தரங்க (அணித் தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தில்ஷான் முனவீர, அஞ்செலோ மெதிவ்ஸ், மிலிந்த சிறிவர்தன, தசுன் சானக்கசீக்குகே பிரசன்ன, வனிந்து ஹஸரங்க, அகில தனஞ்ச, ஜெப்ரி வன்டர்சேய், திசர பெரேரா, இசுரு உதான, லசித் மாலிங்க, சுரங்க லக்மால், விக்கும் சஞ்சய