இலங்கை T-20 அணியில் மீண்டும் தசுன் சானக்க, இசுரு உதான

3497
dasun and isuru

இம்மாதம் 6ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான T-20 போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாத்தில் இசுரு உதான மற்றும் தசுன் சானக்க ஆகிய வீரர்களை தேசிய அணியின் தேர்வாளர்கள் இணைத்துள்ளனர்.

இரும்புக்கர சகல துறை வீரரான தசுன் சானக்க இதுவரையில் 12 T-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். பெப்பரவரி மாதம் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது T-20 போட்டியில் இறுதியாக பிரசன்னமாகிய அவர் இரண்டு விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தார்.

இந்திய அணியால் ஒரு நாள் தொடரில் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை

சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும்..

அதேபோன்று, 2009ஆம் ஆண்டு அறிமுகமான இடதுகை மித வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதான குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். இதுவரையில் 8 T-20 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் உதான 9 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளதுடன், 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்த சிறப்புப் பந்து வீச்சினையும் கொண்டுள்ளார். இவர் இறுதியாக ஜனவரி மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான T-20 தொடரில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடரையும் 3-0 என பறிகொடுத்து தற்போது ஒரு நாள் தொடரிலும் 5-0 என இந்தியாவினால் வைட் வொஷ் செய்யப்பட்டிருக்கும் இலங்கை, நடைபெறவிருக்கும் T-20 போட்டியில் சவால் மிக்க இந்தியாவிற்கு எதிராக முதல் வெற்றியினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.