Home Tamil நீலங்களின் சமர் புதிய சம்பியனான கொழும்பு றோயல் கல்லூரி

நீலங்களின் சமர் புதிய சம்பியனான கொழும்பு றோயல் கல்லூரி

152

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை புனித தோமியர் கல்லூரிகள் இடையில் 144ஆவது முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் ”நீலங்களின் சமர்” (Battle of Blues) கிரிக்கெட் போட்டியில் 180 ஓட்டங்களால் றோயல் கல்லூரி அணி அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

இந்த கிரிக்கெட் பெரும் போட்டி டி.எஸ். சேனாநாயக்க நினைவுக் கேடயத்திற்காக நடைபெறும் நிலையில் இப்போட்டியில் வெற்றி பெற்ற றோயல் கல்லூரி, நினைவுக் கேடயத்தின் புதிய சொந்தக்காரர்களாகவும், புதிய சம்பியன்களாகவும் நாமம் சூடியிருக்கின்றது.

>> விறுவிறுப்பான மோதலில் வெற்றிபெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி!

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டி கடந்த வியாழன் (16) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித தோமியர் கல்லூரி வீரர்கள் றோயல் கல்லூரி அணியினை துடுப்பாடப் பணித்தனர். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கொழும்பு றோயல் கல்லூரி அணியானது அதன் தலைவர் தாஸிஸ் மன்ச்நாயக்க மற்றும் ரமிரு பெரேரா ஆகியோரின் அபார சதங்களோடு முதல் இன்னிங்ஸில் 326 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட போது ஆட்டத்தினை இடைநிறுத்தியது. தாஸிஸ் மன்ச்நாயக்க 17 பௌண்டரிகள் அடங்கலாக 150 பந்துகளில் 137 ஓட்டங்கள் குவித்தார். மறுமுனையில் ரமிரு பெரேரா 2 சிக்ஸர்கள் 15 பௌண்டரிகள் உடன் 128 ஓட்டங்கள் எடுத்தார்.

தோமியர் அணியின் பந்துவீச்சில் ஆகாஷ் பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, கவிந்து டயஸ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிருந்தார்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தோமியர் கல்லூரி அணி 153 ஓட்டங்களையே முதல இன்னிங்ஸில் எடுத்தது. தோமியர் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக சேனாதி புலான்குலாம 40 ஓட்டங்கள் எடுத்தார்.

அதேவேளை றோயல் கல்லூரி பந்துவீச்சில் புலான் வீரத்துங்க 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, ரணுக்க மலாவியிராச்சி மற்றும் சந்தேஷ் ராமநாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> வில்லியம்சன், நிக்கோல்ஸின் இரட்டைச் சதங்களுடன் வலுப்பெற்ற நியூசிலாந்து

பின்னர் 173 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த றோயல் கல்லூரி அணி இம்முறை 4 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்கள் பெற்ற போது தமது ஆட்டத்தினை நிறுத்தியது. றோயல் கல்லூரி அணிக்காக அதன் தலைவர் தாஸிஸ் மன்ச்நாயக்க இம்முறை அரைச்சதம் விளாசி 49 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம் ஆகாஷ் பெர்னாண்டோ இம்முறையும் பந்துவீச்சில் அசத்தி 04 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.

றோயல் கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 342 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய புனித தோமியர் கல்லூரி அணியானது 161 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் 180 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

தோமியர் கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்திற்காக செனேஷ் ஹெட்டியராச்சி 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று ஆறுதல் தர ஏனைய அனைவரும் ஏமாற்றினர். மறுமுனையில் றோயல் கல்லூரி அணியின் பந்துவீச்சில் ரமிரு பெரேரா, நெத்வின் தர்மரட்ன மற்றும் சினேத் ஜயவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருது றோயல் கல்லூரி அணியின் தலைவர் தாஸிஸ் மன்ச்நாயக்கவிற்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

Result


Royal College
326/8 (74) & 168/4 (26)

S. Thomas’ College
153/10 (55) & 161/10 (58.5)

Batsmen R B 4s 6s SR
Rehan Peris c Senesh Hettiarachchi b Akash Fernando 4 4 1 0 100.00
Sineth Jayawardena b Nathan Caldera 1 3 0 0 33.33
Ovina Ambanpola b Akash Fernando 30 71 1 0 42.25
Uvindu Weerasekara c Nathan Caldera b Kavindu Dias 3 13 0 0 23.08
Dasis Manchanayake b Kavindu Dais 137 150 17 0 91.33
Ramiru Perera c Romesh Mendis b Kavindu Dais 128 186 15 2 68.82
Sandesh Ramanayaka lbw b Akash Fernando 0 4 0 0 0.00
Sanvidu Senartharachchi not out 8 8 0 0 100.00
Bulan Weerathunga b Akash Fernando 2 3 0 0 66.67
Nethwin Dharmarathne not out 0 5 0 0 0.00


Extras 13 (b 8 , lb 0 , nb 3, w 2, pen 0)
Total 326/8 (74 Overs, RR: 4.41)
Bowling O M R W Econ
Akash Fernando 13 1 55 4 4.23
Nathan Caldera 16 2 64 1 4.00
Kavindu Dias 13 2 58 3 4.46
Dinura Gunawardena 7 0 35 0 5.00
Charuka Peiris 13 0 55 0 4.23
Abheeth J Paranawidana 10 0 39 0 3.90
Senadhi Bulankulama 1 0 3 0 3.00
Mahith Perera 1 0 9 0 9.00
Batsmen R B 4s 6s SR
Senadhi Bulankulama c Sanvidu Senartharachchi b Ranuka Malaviarachchi 40 104 5 0 38.46
Thishen Ehaliyagoda c Sandesh Ramanayaka b Bulan Weerathunga 5 7 1 0 71.43
Dineth Gunawardena lbw b Sandesh Ramanayaka 10 26 2 0 38.46
Romesh Mendis c Sandesh Ramanayaka b 4 9 1 0 44.44
Nathan Caldera c Dasis Manchanayake b Ramiru Perera 20 25 3 0 80.00
Charuka Peiris c Sineth Jayawardena b Sandesh Ramanayaka 17 66 2 0 25.76
Mahith Perera c Sanvidu Senartharachchi b Bulan Weerathunga 30 43 5 0 69.77
Senesh Hettiarachchi c b Sineth Jayawardena 9 33 1 0 27.27
Akash Fernando not out 1 9 0 0 11.11
Kavindu Dais st Sanvidu Senartharachchi b Sineth Jayawardena 0 6 0 0 0.00
Abheeth J Paranawidana b Bulan Weerathunga 0 4 0 0 0.00


Extras 17 (b 6 , lb 0 , nb 2, w 9, pen 0)
Total 153/10 (55 Overs, RR: 2.78)
Bowling O M R W Econ
Ranuka Malaviarachchi 12 1 39 2 3.25
Bulan Weerathunga 14 6 26 3 1.86
Sandesh Ramanayaka 10 0 36 2 3.60
Dasis Manchanayake 2 0 11 0 5.50
Sineth Jayawardena 7 3 9 2 1.29
Ramiru Perera 10 1 29 1 2.90
Batsmen R B 4s 6s SR
Sineth Jayawardena lbw b Akash Fernando 4 5 1 0 80.00
Ovina Ambanpola c Romesh Mendis b Akash Fernando 5 11 0 0 45.45
Uvindu Weerasekara b Akash Fernando 28 43 2 1 65.12
Dasis Manchanayake b Akash Fernando 57 49 6 0 116.33
Ramiru Perera not out 46 34 3 2 135.29
Sanvidu Senartharachchi not out 11 16 0 0 68.75


Extras 17 (b 11 , lb 0 , nb 2, w 4, pen 0)
Total 168/4 (26 Overs, RR: 6.46)
Bowling O M R W Econ
Nathan Caldera 7 0 28 0 4.00
Akash Fernando 9 0 59 4 6.56
Kavindu Dias 6 0 39 0 6.50
Dinura Gunawardena 3 0 16 0 5.33
Charuka Peiris 1 0 15 0 15.00


Batsmen R B 4s 6s SR
Thishen Ehaliyagoda lbw b Ranuka Malaviarachchi 0 3 0 0 0.00
Dineth Gunawardena c Uvindu Weerasekara b Sandesh Ramanayaka 15 44 1 0 34.09
Romesh Mendis lbw b Bulan Weerathunga 12 20 2 0 60.00
Senadhi Bulankulama c b Nethwin Dharmarathne 13 39 2 0 33.33
Nathan Caldera b Nethwin Dharmarathne 18 40 1 0 45.00
Mahith Perera lbw b Dasis Manchanayake 7 8 1 0 87.50
Senesh Hettiarachchi c Dasis Manchanayake b Sineth Jayawardena 46 87 7 0 52.87
Charuka Peiris b Ramiru Perera 22 86 3 0 25.58
Akash Fernando c Uvindu Weerasekara b Ramiru Perera 0 1 0 0 0.00
Kavindu Dais lbw b Sineth Jayawardena 14 19 3 0 73.68
Abheeth J Paranawidana not out 0 8 0 0 0.00


Extras 14 (b 8 , lb 4 , nb 2, w 0, pen 0)
Total 161/10 (58.5 Overs, RR: 2.74)
Bowling O M R W Econ
Ranuka Malaviarachchi 10 2 34 1 3.40
Bulan Weerathunga 9 4 18 1 2.00
Sandesh Ramanayaka 7 1 24 1 3.43
Sineth Jayawardena 9.5 3 14 2 1.47
Dasis Manchanayake 4 0 9 1 2.25
Nethwin Dharmarathne 10 2 27 2 2.70
Ramiru Perera 9 2 25 2 2.78



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<