காலி அணிக்கு வலுச்சேர்த்த லசித் பெர்ணாந்துவின் சகலதுறை ஆட்டம்

107

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டுக்கான உள்ளுர் பருவ காலத்திற்கான ப்ரீமியர் லீக் B பிரிவு தொடரின் 4ஆவது வாரத்துக்கான நான்கு போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

காலி கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த லசித் பெர்ணாந்துவின் சகலதுறை ஆட்டத்தால் பொலிஸ் விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் காலி விளையாட்டுக் கழகம் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என சகலதுறையிலும் அசத்தியிருந்தது.

கட்டுநாயக்க FTZ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணி, காலி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 95 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக எந்தவொரு வீரரும் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக்கொள்ளவில்லை.

இதன் போது காலி அணி சார்பில் பந்துவீச்சில் கயான் சிறிசோம மற்றும் லசித் பெர்ணாந்து  ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

தொடர்ந்துசைமுதல் நாளில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி கிரிக்கெட் கழகம், இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின்போது 193 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

பொலிஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 95 (27.3) – சமித் துஷாந்த 23, கயான் சிறிசோம 5/29, லசித் பெர்ணாந்து 5/29

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 193/4 (68) – லசித் பெர்ணாந்து 64, தமித ஹுனுகும்புர 53, திலின மஸ்முல்ல 26*, சானக விஜேசிங்க 22, நிமேஷ் விமுக்தி 2/60


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

நவீன் கவிகார மற்றும் தினுஷ்க மாலன் ஆகியோரின் அபார பந்துவீச்சினால் லங்கன் கிரிக்கெட் கழகம் பாணந்துறை அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.

அகலங்க கனேகமவின் பந்துவீச்சால் தமிழ் யூனியனுக்கு நெருக்கடி

பாணந்துறை விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற லங்கன் கிரிக்கெட் அணி பாணந்துறை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய பாணந்துறை அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய காசிப் நவீத் 50 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

எனினும், இப்போட்டியில் ஆரம்பம் முதல் பாணந்துறை அணிக்கு அச்சுறுத்தலை கொடுத்து பந்துவீச்சில் மிரட்டிய வலதுகை வேகப்பந்துவீச்சாளரான தினுஷ்க மாலன் முதல் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அவ்வணிக்கு நெருக்கடி கொடுக்க, மறுமுனையில் சிறப்பாக பந்துவீசிய நவீன் கவிகார 4 விக்கெட்டுக்களையும், வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய லங்கன் அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (60.1) – காசிப் நவீத் 50, சகுரங்க பொன்சேகா 39, ரசிக பெர்ணாந்து 39, சுரேஷ் பீரிஸ் 31, வினோத் பெரேரா 23, நவீன் கவிகார 4/80, தினுஷ்க மாலன் 3/42, சானக ருவன்சிறி 2/31

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 142/3 (27) – லக்‌ஷான் ரொட்ரிகோ 63*, சசீன் பெர்ணாந்து 28, சானக ருவன்சிறி  27*, சுரேஷ் பீரிஸ் 3/37


களுத்துறை நகர சபை விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகலை யூத் கிரிக்கெட் கழகம்

குருநாகல் வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற களுத்துறை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய குருநாகலை யூத் கிரிக்கெட் அணி, இன்றைய நாள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக தமித் பெரேரா 88 ஓட்டங்களையும், அணித்தலைவர் தனுஷ்க தர்மசிறி 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் களுத்துறை அணி சார்பாக லக்‌ஷான் ஜயசிங்க மற்றும் மதீஷ பெரேர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

குருநாகலை யூத் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 275/7 (90) – தமித் பெரேரா 88, தனுஷ்க தர்மசிறி 52, தரிந்து தசநாயக்க 46, சரித் மெண்டிஸ் 28, லக்‌ஷான் ஜயசிங்க 2/39, மதீஷ பெரேரா 2/66


விமானப்படை விளையாட்டுக்கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

விமானப்படை அணியின் தலைவர் துலாஜ் உதயங்கவின் அபார சதத்தின் உதவியுடன், கடற்படை அணிக்கெதிரான போட்டியில் விமானப்படை அணி வலுவான நிலையில் இன்றைய போட்டியை நிறைவுக்கு கொண்டுவந்தது.

மாலிங்கவை விடுவித்துள்ள மும்பை அணி

வெலிசரை கடற்படை மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கடற்படை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி விமானப்படை அணி 304 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பாக துலாஜ் உதயங்க 115 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் தரூஷன் இத்தமல்கொட 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் கடைசி நேரத்தில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கடற்படை அணி இன்றைய நாள் ஆட்ட நிறைவடையும் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 304 (83.5) – துலாஜ் உதயங்க 115, ரவிந்து குணவர்தன 40*, சமிகர ஹேவகே 32, டி வீரரத்ன 21, தரூஷன் இத்தமல்கொட 4/39, சுதாரக தக்‌ஷின 3/68, நுவன் சம்பத் 2/33

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 21/1 (4)