ஆசிய சம்மேளன சம்பியன்ஷிப் தொடரிற்கான இலங்கை இளையோர் குழாம் அறிவிப்பு

842

2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) 16 வயதுக்கு உட்பட்ட வீரர்களிற்கான சம்பியன்ஷிப் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் பங்குபெறும் இலங்கை தேசிய அணிக்கான 30 பேரைக் கொண்ட வீரர்கள் பட்டியலை இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) வெளியிட்டுள்ளது.

16 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் வீரர்களை இணைப்பதற்காக, இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால், ஜூன் மாதம் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் சிட்டி கால்பந்து மைதானத்தில் வீரர்கள் தெரிவு முகாமொன்று நடைபெற்றிருந்தது. இத்தெரிவில், 17ஆம் திகதியில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களினை சேர்ந்த வீரர்களும் 18ஆம் திகதி இடம்பெற்ற தெரிவில் தென் மற்றும் மேல் மாகாணங்களை சேர்ந்த வீரர்களும் பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். இந்த இரண்டு தெரிவுகளிலும் இருந்து சிறப்பாக செயற்பட்ட வீரர்கள் ஜூன் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்றிருந்த இறுதி தெரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதிலிருந்து தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் 30 வீரர்கள் கொண்ட குழாமில் காணப்படும் 10 வீரர்கள் ஏற்கனவே மார்ச் மாதம் நடைபெற்ற தெற்காசிய மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் 16 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களிற்கான தொடரில் பங்கேற்றவர்களாகக் காணப்படுகின்றனர். ரவிகுமார் தனுஜன், H.M.J. சாமோத், மொஹமட் றிகாஸ், மொஹமட் ருக்ஷான், மொஹமட் உமர், மொஹமட் ஆஷீக், நபீல் நிஷாம், சமத் கொடிதுவக்கு, சந்தீப வாஸ் மற்றும் விஷால்க சுலக்ஷன ஆகியோரே அந்த பத்து வீரர்களுமாவர்.

அத்தோடு வடக்கு கிழக்கு பிராந்தியங்களை சேர்ந்த ரவிகுமார் தனுஜன், K. சுதர்ஷன், E. தினியாயஸ் மற்றும் J.M. றிஹான் ஆகிய நான்கு வீரர்களுக்கும் இக்குழாமில் வாய்ப்பு கிட்டியுள்ளது. மேலும் தென் மாகாணத்தை சேர்ந்த ஷெஹான் பிரயான் வீரப்புலி, ருமேஷ் மெண்டிஸ், லக்ஷன் தனஞ்சய மற்றும் நவோத் விஹாங்க ஆகிய வீரர்களும் இக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் புனித ஜோசப் கல்லூரியின் மாணவர்களான அக்ஷாத் மிஹிரு விஜேசூரிய, தனஞ்சய டி சில்வா மற்றும் ரசிந்து ரஷ்மிக்க ரணசிங்க ஆகியோரும் இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளதோடு, ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி மற்றும் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிகளை சேர்ந்த தலா இரண்டு மாணவர்களும் தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

தெரிவாகியுள்ள இவ்வணிக்கு பிரதான பயிற்றுவிப்பாளராக ஜப்பான் நாட்டின் பிரபல பயிற்றுவிப்பாளர் சுசுகி ஷிகாசி செயற்படவுள்ளார். அதேபோன்று, துணைப் பயிற்றுவிப்பாளராக மொஹமட் அஜ்வத் அவர்களும், கோல் காப்பாளர் பயிற்றுவிப்பாளராக சம்பத் பண்டார அவர்களும் கடமையாற்றவுள்ளனர்.

அணிக்குழாம் (30 வீரர்கள்)

இல. பெயர் பாடசாலையின் பெயர் நிலை
1. R. தனுஜன் மகாஜனாக் கல்லூரி, யாழ்ப்பாணம் முன்கள வீரர்(FW)
2. K. சுதர்சன்   புனித ஹென்ரியரசர் கல்லூரி, யாழ்ப்பாணம் பின்கள வீரர்(DF)
3. E. தினியாயஸ் புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் முன்கள வீரர்(FW)
4. J.M. றிஹான் அலிகார் மத்திய கல்லூரி, மட்டக்களப்பு மத்திய கள வீரர் (MF)
5. H.M.J. சமோத் மலியதேவ ஆண்கள் கல்லூரி, குருணாகல் மத்திய கள வீரர் (MF)
6. R.M.R.D.G. ராஜபக்ஷ   நிஸ்ஸங்க மகா வித்தியாலயம் – குருநாகல் மத்திய கள வீரர் (MF)
7. N.W.P. ரஷந்த தில்ருக்ஷ   புனித செபஸ்டியன் கல்லூரி, கட்டுனேரிய பின்கள வீரர்(DF)
8. மொஹமட் அக்ரம் பெர்ரவேர்ட்ஸ் கல்லூரி, கண்டி முன்கள வீரர்(FW)
9. மொஹமட் றிகாஸ் விஷன் சர்வதேச கல்லூரி, கண்டி முன்கள வீரர்(FW)
10. M.R.M. ருக்ஷான் அஜ்மீர் தேசிய பாடசாலை, உக்குவளை முன்கள வீரர்(FW)
11. M.A. அஷக்த மிஹிரு விஜேசூரிய புனித ஜோசப் கல்லூரி, அனுராதபுரம் கோல் காப்பாளர் (GK)
12. H.M.A. தனஞ்சய டி சில்வா புனித ஜோசப் கல்லூரி, அனுராதபுரம் மத்திய கள வீரர் (MF)
13. R.A. ரசிந்து ரஷ்மிக்க ரணசிங்க புனித ஜோசப் கல்லூரி, அனுராதபுரம் மத்திய கள வீரர் (MF)
14. மொஹமட் உமர் ரண்பொகுனுகம மகாவித்தியாலயம், நித்தம்புவ மத்திய கள வீரர் (MF)
15. M. நுஸ்கான் புனித மிக்கேல் கல்லூரி கோல் காப்பாளர் (GK)
16. மொஹமட் ஆஷீக் ஹமீட் அல் ஹூசைனி கல்லூரி, கொழும்பு முன்கள வீரர்(FW)
17. P. அஜித் பிரசாந்த் ஹமீட் அல் ஹூசைனி கல்லூரி, கொழும்பு முன்கள வீரர்(FW)
18. அனாப் அமீர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு கோல் காப்பாளர் (GK)
19. நபீல் ஸாஹிரா கல்லூரி, கொழும்பு பின்கள வீரர்(DF)
20. சமத் கொடிதுவக்கு நாலந்தா கல்லூரி, கொழும்பு முன்கள வீரர்(FW)
21. N.F.M. சிபான் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு முன்கள வீரர்(FW)
22. சந்தீப வாஸ் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு கோல் காப்பாளர் (GK)
23. M.I.M. முஷாரப் அல்-ஹிலால் மத்திய கல்லூரி, நீர்கொழும்பு முன்கள வீரர்(FW)
24. ஷெஹான் பிரயான் வீரப்புலி றாகுல கல்லூரி, மாத்தறை முன்கள வீரர்(FW)
25. கசுன் தில்ஹார டி மெசனோட் கல்லூரி, கந்தானை பின்கள வீரர்(DF)
26. விஷால்க சுலக்ஷன புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி முன்கள வீரர்(FW)
27. ருமேஷ் மெண்டிஸ் கிந்தோட்டை மகா வித்தியாலயம், காலி பின்கள வீரர்(DF)
28. லக்‌ஷான் தனஞ்சய வித்தியாலோக்க கல்லூரி, காலி மத்திய கள வீரர் (MF)
29. நவோத் விஹாங்க தீரனாந்த மகா வித்தியாலயம் முன்கள வீரர்(FW)
30. ஷெஹான் ஹர்ஷன கொத்தலாவல மகாவித்தியாலயம், ரத்மலான மத்திய கள வீரர் (MF)