நீளம் பாய்தலில் மற்றுமொரு மைல்கல்லை எட்டினார் தனுஷ்க

191
Danushka Sandaruwan

இலங்கையின் முன்னணி நீளம் பாய்தல் வீரரான தனுஷ்க சந்தருவன், அமெரிக்காவில் நடைபெற்ற திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரொன்றில் பங்குகொண்டு முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

மிகவும் குளிரான காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் 7.87 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து இந்த வெற்றியை அவர் பதிவுசெய்துள்ளார். நீளம் பாய்தலில் அவரது அதிசிறந்த தூரப் பெறுமதி இதுவாகும்.

அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான முதலாவது திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இதுவென்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> உள்ளக நீளம் பாய்தலில் இலங்கை சாதனை படைத்தார் தனுஷ்க

முன்னதாக கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட தனுஷ்க, ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 7.82 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய இலங்கை சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<