SAFF கிண்ண வெற்றி வாய்ப்புகள் பற்றி இலங்கை நம்பிக்கை

285

பங்களாதேஷில் நடைபெறும் SAFF சுசுகி கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்னர் இலங்கை கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் நிஸாம் பகீர் அலி மற்றும் அணியின் தலைவர் சுபாஷ் மதுஷான் ஆகியோர் பங்களாதேஷில் நேற்று (4) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.  

பசாலின் அபார கோலினால் பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை

பங்களாதேஷ் கால்பந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற நட்புரீதியிலான கால்பந்து..

குறித்த தொடரில் இலங்கை அணி B குழுவில் தனது முதல் போட்டியில் பங்கபந்து தேசிய அரங்கில் இன்று (செப்டெம்பர் 5 ஆம் திகதி) இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி 18:30க்கு ஆரம்பமாகும்.   

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பகீர் அலி இலங்கையின் வாய்ப்புகள் தொடர்பில் நம்பிக்கையுடன் கருத்து வெளியிட்டார்.

இந்தியா மற்றும் மாலைதீவுகள் வலுவான அணிகள். பதினொருவருக்கு எதிரான பதினொருவர் என மைதானத்திலேயே போட்டி தீர்மானிக்கப்படும். அரையிறுதிக்குச் செல்ல நாம் எம்மால் முடிந்த திறமையை வெளிப்படுத்துவோம்.

எமது அணி மூத்த மற்றும் இளைய வீரர்கள் என கலந்து உள்ளனர். ஜப்பானில் இரண்டு வாரங்கள் செலவிட்டு பயிற்சிப் போட்டிகளில் ஈடுபட்டதோடு தென் கொரியாவில் மேலும் இரண்டு போட்டிகளில் ஆடினோம். இது அணியின் தயார்படுத்தலுக்கு உதவியது. நாம் பங்களாதேஷுக்கு எதிராக ஒரு போட்டியில் ஆடி வெற்றி பெற்றோம். ஜப்பானுக்கு செல்வதற்கு முன் நாம் உள்நாட்டில் லிதுவேனியாவுக்கு எதிராகவும் ஆடி 0-0 என சமன் செய்தோம்.” என்றார்.

மன்செஸ்டர் யுனைடெட்டை சந்திக்கும் ரொனால்டோ

சம்பியன்ஸ் லீக் குழுநிலை அணிகளின் விபரம் இம்முறை ஐரோப்பிய (UEFA) சம்பியன்ஸ் லீக்…

மாலைதீவின் ஈகள்ஸ் கழத்திற்காக ஆடும் சுஜான் பெரேரா இலங்கை அணியின் முக்கிய வீரராகவும், நம்பிக்கைக்குறிய கோல் காப்பாளராகவும் உள்ளார். சர்வதேச அனுபவம் கொண்ட சுஜான்  பற்றி பயிற்சியாளர் குறிப்பிடும்போது,

அவருக்கு அந்த அணியின் (மாலைத்தீவுகள்) வீரர்கள் பற்றி தெரிந்திருப்பது சாதகமானது. அவர் கோல்காப்பாளராக நன்றாக செயற்படுகிறார். இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் மாலைதீவுகளில் நான் இரண்டு ஆண்டுகள் இருந்ததால் எனக்கும் அவர்கள் பற்றி தெரியும்.” என்றார்.

இந்த தொடருக்கு முன்னர் சுபாஷ் மதுஷான் தலைமையிலான இலங்கை கால்பந்து அணி கடந்த மாதம் 29ஆம் திகதி பங்களாதேஷ் தேசிய அணியுடன் நட்பு ரீதியிலான போட்டி ஒன்றில் ஆடியது. குறித்த போட்டியில் பசால் மொஹமடின் அபார கோலுடன் இலங்கை அணி 1-0 என வெற்றி பெற்றது.  

எனவே, சிறந்த நம்பிக்கையுடனும் பலமுடனும் உள்ள இலங்கை அணியின் தயார்படுத்தல் பற்றி கூறிய தலைவர் சுபாஷ் மதுஷான்,  

நன்றாக தயார்படுத்தலில் ஈடுபட்டோம். நாம் பயிற்சி போட்டிகளில் ஆடினோம். அணியினர் உடல் மற்றும் உளரீதியில் தயாராக உள்ளனர்.” என்றார்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<