தகாத வார்த்தைப் பிரயோகத்திற்காக பெயர்ஸ்டோவ் மீது நடவடிக்கை

74

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ஜொன்னி பெயர்ஸ்டோவ், மைதானத்தில் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பாவித்த குற்றச்சாட்டில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) கடுமையான எச்சரிக்கையினையும் நன்னடத்தை விதிமீறல் புள்ளி ஒன்றினையும் பெற்றுள்ளார். 

நேற்று (10) நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரின் ஐந்தாவதும் கடைசியுமான போட்டி ஒக்லண்ட் நகரில் நடைபெற்றிருந்தது. 

நியூஸிலாந்தின் வெற்றியை சுப்பர் ஓவரில் தட்டிப் பறித்த இங்கிலாந்து

நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சுப்பர் ஓவரில் வெற்றி பெற்ற …

இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தின் போது ஆட்டமிழந்த ஜொன்னி பெயர்ஸ்டோவ் தனது ஆட்டமிழப்புக்காக தகாத வார்த்தைப் பிரயோகங்களை உபயோகம் செய்தார். இவ்வாறு, பெயர்ஸ்டோவ் உபயோகம் செய்த தவறான வார்த்தைகள் ஸ்டம்ப் ஒலி வாங்கியில் பதிவாகி போட்டியின் நேரடி அஞ்சலிலும் கேட்டிருந்தது. இதனை போட்டியின் நடுவர்களும் செவியுற்ற நிலையிலையே பெயர்ஸ்டோ, தற்போது ஐ.சி.சி. இன் எச்சரிக்கைக்கு ஆளாகியிருக்கின்றார். 

பெயர்ஸ்டோவ் மேற்கொண்ட தவறு ஐ.சி.சி. விதி மீறல்களில் முதல் நிலைக்குரிய குற்றம் (Level 1) என இனம் காட்டப்பட்டிருப்பதோடு, பெயர்ஸ்டோவும் தனது குற்றத்தினை ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

பெயர்ஸ்டோவின் குற்றம் ஒருபுறமிருக்க, இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் நடைபெற்று முடிந்திருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரினை 3-2 எனக் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…