பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு 58 பேர் கொண்ட உயர் செயல்திறன் குழு

Paris 2024 Olympic Games

414
Paris 2024 Olympic Games

இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தயாராகும் வகையில் 58 வீர, வீராங்கனைகளை உள்ளடக்கிய உயர் செயல்திறன் குழாம் ஒன்று பெயரிடப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு மற்றும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் 58 பேர் கொண்ட உயர் செயல்திறன் குழாமை அறிவிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்தின்படி 15 விளையாட்டு நிகழ்ச்சிகளை இலக்காகக் கொண்டு இந்தக் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

இதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் 33 பேர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காகவும், 25 பேர் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காகவும் பெயரிடப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 11 போட்டி நிகழ்ச்சிகளிலும், பாராலிம்பிக்கில் 8 போட்டி நிகழ்ச்சிகளிலும் இலங்கை வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவரும், 100 மீற்றரில் தெற்காசிய சாதனைக்குச் சொந்தக்காரருமான யுபுன் அபேகோன், ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற இளம் வீராங்கனை தருஷி கருணாரத்ன, நதீகா லேகம்கே, நதீஷா ராமநாயக்க மற்றும் பாராலிம்பிக் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த மற்றும் சமித்த துலான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் 19 மெய்வல்லுனர் வீரர்கள் தவிர பெட்மிண்டன் (1), குத்துச்சண்டை (2), டைவிங் (1), ஜிம்னாஸ்டிக் (2), ஜூடோ (1), துப்பாக்கி சுடுதல் (2), ஸ்குவாஷ் (1), நீச்சல் (1), பளுதூக்குதல் (2) மற்றும் மல்யுத்தம் (1) ஆகிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

அதேநேரம், பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு இலங்கை சார்பில் 12 மெய்வல்லுனர் வீரர்களுடன் எயார் ரைபிள் (3), வில்வித்தை (2), நீச்சல் (2), சக்கர நாற்காலி டென்னிஸ் (2) பெட்மிண்டன் (1), படகோட்டம் (1) மற்றும் மேசைப்பந்து (1) விளையாட்டுகளில் வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழா எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி முதல்; ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து மாற்றுதிறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மெய்வல்லுனர் – யுபுன் அபேகோன், அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஆர்.எம்.ஆர்.என் ராஜகருணா, பபசர நிகு, பசிந்து கொடிகார, எச்.வி.டி தேஷான், நதீஷா ராமநாயக்க, தருஷி கருணாரத்ன, கயன்திகா அபேரத்ன, தில்ஹானி லேகம்கே, ஜே.எச் உத்தரா, ஹர்ஷனி பெர்னாண்டோ, சயுரி லக்ஷிமா மெண்டிஸ், வை.எம்.சி யோதசிங்க, சாரங்கி சில்வா, ரந்தி குரே, ஜே.ஐ லக்விஜய, ருமேஷிகா ரத்நாயக

பெட்மிண்டன் – விரேன் நெத்தசிங்க

குத்துச்சண்டை – உமயங்க மிஹிரான், ருக்மால் பிரசன்ன

ஸ்ப்ரின்போர்ட் – துலான்ஜன பெர்னாண்டோ

ஜிம்னாஸ்டிக் – நதிலா நெத்விரு, மில்கா கிஹானி

ஜுடோ – ஆர்.சி.என் தர்மவர்தன

துப்பாக்கி சுடுதல் – அமந்;;திகா அமரசிங்க, கவின் ஜயசேகர

ஸ்குவாஷ் – ரவிந்து லக்சிறி

நீச்சல் – அகலங்க பீரிஸ்

பளுதூக்குதல் – வை.டி.ஐ குமார, டீ.எம்.ஐ.சி திஸாநாயக்க

மல்யுத்தம் – அஹின்சா பெர்னாண்டோ

பாராலிம்பிக்குழு

மெய்வல்லுனர் – தினேஷ் பிரியந்த, சமித்த துலான், மதுரங்க சுபசிங்க, பிரதீப் சோமசிறி, நுவன் இந்திக, பாலித பண்டார, குமுது ப்ரியங்கா, அனில் பிரசன்ன, புத்திக இந்திரபால, தனனி தனன்ஜனா, அமில பிரசான், தேஷான் சில்வா, ஹேஷான் பெர்னாண்டோ

துப்பாக்கி சுடுதல் – யு.ஜி.எஸ் குமார, நெரன்ஜலா ரணசிங்க, கெலும் சூரியகுமார

வில்வித்தை – சம்பத் பண்டார, ஐ.ஜே.என் வீரதுங்க

பெட்மிண்டன் – சுஜீவ பெரேரா

படகோட்டம் – பிரியமால் பெரேரா

நீச்சல் – கலீனா பஸ்நாயக்க, நவீட் ரஷீன்

டென்னிஸ் – டி.எஸ்.ஆர் தர்மசேன, காமினி திஸாநாயக்க

மேசைப்பந்து – டி.டி சில்வா

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<