மேஜர் T20 லீக்கில் பிரகாசித்த சந்திமால், அகில மற்றும் சீகுகே

630

இலங்கையில் உள்ள 24 முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் T20 லீக் தொடரின் இரண்டாவது நாளுக்கான 12 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதில், இன்று காலை ஆரம்பமான ஆறு போட்டிகளின் முடிவுகள் இதோ…

மேஜர் T20 லீக்கில் அதிரடியை வெளிக்காட்டிய சதீர, சானக மற்றும் அவிஷ்க

இலங்கையில் உள்ள முன்னணி 24 கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான மேஜர் T20 லீக்…

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் NCC

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் சந்திமால் மற்றும் மஹேல உடவத்த ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் NCC அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

NCC – 192/2 (20) – லஹிரு உதார 45(29), மஹேல உடவத்த 57*(35), தினேஷ் சந்திமால் 41*(28), ஜயலத் 43/2

ப்ளூம்பீல்ட் கழகம் – 125/5 (20) – அசந்த சிங்கப்புலி 52(50), மதுஷன் ரவிச்சந்திரகுமார் 33(22)

முடிவு – NCC 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

Photos: NCC vs Bloomfield C & AC – Major T20 Tournament 2018/19


சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டு கழகம்

பாணந்துறை விளையாட்டு கழகத்துக்கு எதிரான போட்டியில், சாலிய சமனின் 5 விக்கெட்டுகளின் உதவியுடன் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரெசென்ஸ் அணி வெற்றிபெற்றது.

போட்டியின் சுருக்கம்

சரெசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 146/9 (20) – நிபுன் கருணாநாயக்க 49(41), லியோ பிரான்சிஸ்கோ 32(27), வினோத் பெரேரா 38/3

பாணந்துறை விளையாட்டு கழகம் – 128/8 (20) – ஷெஹான் வீரசிங்க 28(28), சரண நாணயக்கார 31, சாலிய சமன் 18/5, ரவீன் செயார் 11/2

முடிவு – சரசென்ஸ் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி


கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில், பந்து வீச்சு பாணியில் மாற்றத்தை ஏற்படுத்தி விளைாயடி வரும் அகில தனன்ஜய 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

Photos: Colts CC vs Negombo CC | Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 174/8 (20) – ப்ரியமல் பெரேரா  63 (67), சதீர சமரவிக்ரம  34 (25), செஹான் அதீஷ 35/3

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 121/10 (17.3) – ஷெஹான் ஜயசூரிய 33 (22), லசித் குரூஸ்புள்ளே 28 (24), அகில தனன்ஜய 17/4, டில்ருவான் பெரேரா 17/3

முடிவு – கோல்ட்ஸ் அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி


பிரீமியர் லீக் டி-20 தொடரில் பிரகாசித்த சிரேஷ்ட வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும், 24 முதல்தர கழகங்கள்….

இலங்கை விமானப்படை விளையாட்டு கழகம் எதிர் குருணாகல் விளையாட்டு கழகம்

குருணாகல் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், உமேக சதுரங்கவின் அபார பந்து வீச்சின் உதவியுடன் விமானப்படை அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Photos: Air Force SC vs Kurunegala Youth CC | Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

இலங்கை விமானப்படை அணி – 176/6 (20) – டுலாஷ் உதயங்க 43(32), உதயவன்ச பராக்ரம 46(36), அனுருத்த ராஜபக்ஷ 37/3

குருணாகல் விளையாட்டு கழகம் – 127/10 (18.5), சமீர சந்தமல் 50(38), ரந்தீர ரணசிங்க 23 (22), உமேக சதுரங்க 10/4

முடிவு – இலங்கை விமானப்படை அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி


இலங்கை இராணுவப்படை விளையாட்டு கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டு கழகம்

இலங்கை கடற்படை அணியை வெறும் 66 ஓட்டங்களுக்கு சுருட்டி, இலங்கை இராணுவப்படை அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

Photos: Army SC vs Navy SC | Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

இலங்கை இராணுவப்படை அணி – 156/8 (20) – அஷான் ரந்திக 33 (18), சஞ்சிக ரித்ம 31* (25), சதிக் நிமால்ஷ 18/2

இலங்கை கடற்படை அணி – 66 (13.2) – சஜித பெர்னாண்டோ 16 (17), சீகுகே பிரசன்ன 19/3, டுஷான் விமுக்தி 18/2

முடிவு – இலங்கை இராணுவப்படை அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி


சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த மடவளை வேகப்புயல் சிராஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பின்னடைவுகளுக்கு சிரேஷ்ட வீரர்களின்….

காலி கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

காலி அணியின் அபார பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல், 83 ஓட்டங்களுக்கு சுருண்ட பதுரெலிய அணி, 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதொல்வியை சந்தித்தது.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் – 147/6 (20) – ஹர்ஷ விதான 42*(29), ரஜீவ வீரசிங்க 35*(17), நுவன் துஷார 21/2

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 83 (16.3) – டில்ஹான் குரே 20(20), லக்ஷான் ரொட்ரிகோ 12/4, கயான் சிரிஷோம 10/2, ரஜித் ப்ரியன் 28/2

முடிவு – காலி அணிக்கு 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி