அழைப்பு தொடரின் ஆரம்ப போட்டியில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் பலப்பரீட்சை

379
nation.lk

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள நான்கு அணிகள் கலந்துகொள்ளும் வலைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக ஆசியாவின் முதல் நிலை வலைப்பந்து அணியான சிங்கப்பூர் அணி இம்மாதம் 27 தொடக்கம் 30ஆம் திகதி வரை இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.    

இலங்கை வலைப்பந்து சம்மேளனம் (NFSL) ஏற்பாடு செய்யும் இந்த தொடரில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு தேசிய அணிகளுடன் இலங்கை அபிவிருத்தி அணி மற்றும் இங்கிலாந்தின் PStar வலைப்பந்து கழகமும் பங்கேற்கின்றன.

ரவுன்ட்-ரொபின் (Round-robin) அடிப்படையிலேயே இந்த தொடர் நடைபெறவுள்ளது. இதன்போது ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகளில் விளையாடும் முடிவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சம்பியன் பட்டத்திற்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அடுத்த இரண்டு அணிகளும் 3 ஆவது இடத்திற்காக போட்டியிடும்.

கண்டி கழகத்தின் எழுவர் ரக்பி பயிற்றுனராக பாஸில் மரிஜா நியமனம்

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கு இலங்கை தேசிய அணிக்கு முக்கிய பயிற்சியை வழங்கும் நோக்கிலேயே இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் ட்ரிக்சி நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை மற்றும் சிங்கப்பூர் அணிகள் வலைப்பந்து அரங்கில் பலமான போட்டியாளர்களாக இருப்பதோடு, இரு அணிகளும் நெருக்கமான பல போட்டிகளில் மோதியுள்ளன. குறிப்பாக ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்  போட்டிகளில் இரு அணிகளும் கடும் போட்டியாளர்களாக உள்ளன. கடந்த 10 சம்பியன்ஷிப் தொடர்களில் சிங்கப்பூர் மற்றும் இலங்கை 7 தொடர்களில் சம்பியன் பட்டம் வென்று பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

எவ்வாறாயினும் அண்மைக் காலத்தில் சிங்கப்பூர் உலக வலைப்பந்து தரவரிசையில் 20 ஆவது இடத்திற்கு முன்னேறி இலங்கையை விடவும் பலம் கொண்ட அணியாக மாறியுள்ளது. இதில் இலங்கை அணி ஆசியாவின் மற்றொரு பலம்மிக்க அணியான மலேசியாவுக்கு (24 ஆவது இடம்) பின்னால் தரவரிசையில் 25 ஆவது இடத்தில் காணப்படுகிறது. இவ்விரு அணிகளும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) முதல் போட்டியில் மோதவிருப்பது உற்சாகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

எட்டாவது முறை FA கிண்ணத்தை கைப்பற்றியது செல்சி அணி

இந்த நான்கு அணிகள் பங்கேற்கும் தொடரின் அனைத்தும் போட்டிகளதும் நேரடி ஒளிபரப்பை கண்டுகளிக்க ThePapare.com உடன் இணைந்திருங்கள். போட்டி தொடர்பான செய்திகள், முன்னோட்டங்கள் மற்றும் வலைப்பந்து தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் www.thepapare.com/netball இணையத்தளத்துக்கு விஜயம் செய்யுங்கள்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<