தோல்வியின் பின்னரும் உலகின் கவனத்தை ஈர்த்த இலங்கை ரசிகர்கள்

2064

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று (05) கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றிருந்தது.

தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக தென்னாபிரிக்காவிடம் ஒருநாள் தொடரை இழந்துள்ள இலங்கை

இலங்கை அணி தென்னாபிரிக்க அணியிடம்..

போட்டியில், 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்த இலங்கை அணி, ஒருநாள் தொடரையும் 0-3 என இழந்திருந்தது. இந்தநிலையில், அணியின் தோல்வியால் ஒருபக்கம் மனமுடைந்து இருக்கும் இலங்கை ரசிகர்கள் நேற்றைய போட்டியின் பின்னர் செய்த காரியம் சமுகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த பின்னர், அங்கு போட்டியை கண்டுகளிக்க வருகைத்தத்திருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அடங்கிய குழுவொன்று, மைதானத்தின் பார்வையாளர் அரங்கு சிலவற்றில் உள்ள குப்பைகளை அகற்றி, அனைவருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகளை பார்வைிட வரும் ரசிகர்கள் தங்களுடைய உணவு பொதிகள், பிளாஸ்டிக் போத்தல்கள், காகிதங்கள் மற்றும் ஏனைய குப்பைகளை மைதானத்தின் பார்வையாளர் அரங்குகளில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் போட்டி நிறைவடைந்த பின்னர் மைதானத்தை பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு மைதான பராமரிப்பாளர்கள் முகங்கொடுத்து வருகின்றனர். அத்துடன் சர்வதேச ரீதியிலான போட்டிகள் நடத்தப்படும் மைதானங்களில் நிலைகளும் மோசமாகின்றன.

இதனை கருத்திற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் தாங்களாக முன்வந்து மைதானத்தில் உள்ள குப்பைகளை அகற்றியுள்ளனர். இதன்மூலம் பல்லேகலை மைதானத்தின் சில பார்வையாளர் அரங்குகள் போட்டி நிறைவடைந்தவுடனேயே சுத்தமாக காட்சியளித்துள்ளது. இதனையடுத்து, மாணவர்களின் குறித்த செயற்பாட்டை பார்த்த ரசிகர்கள் சிலரும் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்ததாக எமது மைதான செய்தியாளர் தெரிவித்தார்.

மீண்டும் இலங்கை அணியில் இணைய மாலிங்கவுக்கு வாய்ப்பு

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான..

இதேவேளை, மாணவர்களின் இந்த செயற்பாட்டின் புகைப்படங்கள் எமது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த நிலையில், குறித்த மாணவர்களின் செயற்பாடுகளை பார்வையிட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்காரவும் குறித்த மாணவர்களுக்கு அவரது உத்தியோகபூர்வ டுவிட்டரின் ஊடாக வாழ்த்தை பதிவுசெய்துள்ளார்.

இதேபோன்று, நடைபெற்று முடிந்த பிஃபா உலகக்கிண்ணத் தொடரில் செனகல் மற்றும் ஜப்பான் ரசிகர்கள், போட்டியின் பின்னர் மைதானத்திலிருந்த குப்பைகளை சுத்தம் செய்து, உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<