உள்ளூர் ஒருநாள் போட்டிகளின் காலிறுதி அணிகள் தேர்வு

318
 

இலங்கை உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான பிரதான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் காலிறுதிக்கான எட்டு அணிகளும் தேர்வு பெற்றுள்ளன. இதில் SSC, NCC, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகங்கள் கடைசி எட்டு இடங்களுக்குள் முன்னேறி இருப்பதோடு ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம், சோனகர் விளையாட்டு கழகங்கள் குழுநிலை போட்டிகளுடனேயே வெளியேறின.

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/2018 பருவத்திற்கான பிரதான ஒருநாள் தொடரின் கடைசி 10 குழுநிலை போட்டிகள் இன்று (18) நடைபெற்றன. இதில் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகத்தை எதிர்கொண்ட செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 131 ஓட்டங்களால் இலகு வெற்றியை பெற்றுக் கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருவிந்து குணதிலக்க பெற்ற சதத்தின் (111) மூலம் செரசன்ஸ் அணி 50 ஓவர்களுக்கும் 272 ஓட்டங்களை பெற்றது. எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை துறைமுக அதிகாரசபை அணி 141 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன் மூலம் செரசன்ஸ் அணி A குழுவில் முதலிடத்தை பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

உள்ளுர் போட்டிகளில் தொடர்ந்து கலக்கும் மாலிங்கவின் மற்றுமொரு மைல்கல்

இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க…

அந்த குழுவில் இருந்து இரண்டாவது அணியாக காலிறுதிக்கு தகுதி பெற்ற SSC தனது கடைசி குழுநிலை போட்டியில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவாக வென்றது. பணந்துறை அணியை 176 ஓட்டங்களுக்கு சுருட்டிய SSC அணி, கௌஷால் சில்வாவின் சதத்தின் உதவியோடு 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அந்த இலக்கை எட்டியது.

தொடரின் B குழுவில் சிலாபம் மேரியன்ஸ் அணி 4 போட்டிகளில் 3இல்  வென்று முதலிடத்தை பிடித்ததோடு அந்த குழுவில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் இரண்டாவது அணியாக காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. லங்கன் கிரிக்கெட் கழகத்தை இன்று எதிர்கொண்ட கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 318 ஓட்டங்களை குவித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ (100) மற்றும் ஹஷான் துமிந்து (101) சதம் பெற்று வலுச் சேர்த்தனர். எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லங்கன் கிரிக்கெட் கழகம் 133 ஓட்டங்களுக்கு சுருண்டது. இந்த போட்டி களுத்துறையில் நடைபெற்றது.

C குழுவுக்காக நடந்த NCC மற்றும் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் அஞ்செலோ பெரேரா தலைமையிலான NCC அணி எந்த நெருக்கடியும் இன்றி வெற்றி பெற்றது. சதுரங்க டி சில்வாவின் (101) சதத்தின் உதவியோடு NCC அணி 210 ஓட்டங்களை பெற்றது. எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விமானப்படை விளையாட்டுக் கழகம் 68 ஓட்டங்களுக்கே சுருண்டது. சச்சிந்த பீரிஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சதம் பெற்ற சதுரங்க டி சில்வா 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன் மூலம் NCC அணி C குழுவில் முதலிடம் பிடித்ததோடு அந்த குழுவில் இரண்டாவது அணியாக BRC அணி கடைசி எட்டு அணிகளுக்குள் முன்னேறியுள்ளது. BRC அணி இன்றைய போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை 32 ஓட்டங்களால் வென்றது.

மோசமான நடத்தைக்கு வருந்திய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

சுதந்திரக் கிண்ண T20 முத்தரப்பு தொடரில் இலங்கையுடனான போட்டியில்…

D குழுவில் லஹிரு திரிமான்ன தலைமையிலான ராகம கிரிக்கெட் கழகம் ஐந்து குழுநிலை போட்டியில் 4இல் வென்று அந்த குழுவில் முதலிடத்தை பிடித்ததோடு காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தனது கடைசி குழுநிலை போட்டியில் ராகம கிரிக்கெட் கழகம் களுத்துறை நகர கழகத்தை எதிர்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராகம கிரிக்கெட் கழகம் 50 ஓவர்களுக்கும் 272 ஓட்டங்களை பெற்றது. லஹிரு திரிமான்ன 74 ஓட்டங்களை பெற்றதோடு லஹிரு மிலந்த 66 ஓட்டங்களை குவித்து இந்த தொடரில் 400 ஓட்டங்களை பெற்ற முதல் வீரராக பதிவானார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய களுத்துறை நகர கிரிக்கெட் கழகம் 153 ஓட்டங்களுக்கு சுருண்டு அந்த குழுவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றது.

இதேவேளை தமிழ் யூனியன் மற்றும் ப்ளூம்பீல்ட் அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான போட்டியில் 2 விக்கெட்டுகளால் வென்று தமிழ் யூனியன் அணி D குழுவில் இரண்டாவது அணியாக காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி தொடக்கம் நடைபெற்றுவரும் பிரதான உள்ளூர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டியின் ஆரம்ப சுற்றில் மொத்தம் 23 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் தொடரின் காலிறுதி போட்டிகள் மார்ச் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும்

போட்டிகளின் சுருக்கம்

 செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 272/6 (50) – ருவிந்து குணசேகர 111, அஷேன் பண்டார 50, சாலிய சமன் 45*, சரித் ஜயம்பதி 3/48

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 141 (36.5) – ரனேஷ் பெரேரா 35, ரமேஷ் நிமந்த 34, சச்சித்ர பெரேரா 3/36, தனுக்க தபரே 2/03, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/32

முடிவு செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 131 ஓட்டங்களால் வெற்றி 


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 282/5 (50) – லஹிரு திரிமான்ன 74, லஹிரு மிலந்த 66, ரொஷேன் சில்வா 60, உதார ஜயசுந்த 41, ஷானக்க சம்பத் 3/54

களுத்துறை நகர கழகம் – 153 (40) – பசிந்து மதுஷான் 56*, லக்ஷான் ஜயசிங்க 24, சஹன் நாணயக்கார 4/45, இஷான் ஜயரத்ன 3/27, அமில அபொன்சோ 2/21 

முடிவு ராகம கிரிக்கெட் கழகம் 119 ஓட்டங்களால் வெற்றி


 SSC எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 176 (46.4) – அரவிந்த பிரேமரத்ன 35, பிரனீத் விஜேசேன 30, அஷேன் கவிந்த 28, ஜெப்ரி வென்டர்சே 4/37, தம்மிக்க பிரசாத் 2/12, சரித் அசலங்க 2/21

SSC – 178/2 (33.2) – கௌஷால் சில்வா 100*, மினோத் பானுக்க 62

முடிவு   SSC அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 195 (49.4) – பிரசன்சன ஜயமான்ன 43, செஹான் வீரசிங்க 39, சந்தருவன் ரொட்ரிகோ 38, ரவிந்திர கருணாரத்ன 27, சுதாரக்க தக்ஷின 5/28

இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் – 199/2 (32.5) – தருஷன் இத்தமல்கொட 70, சுபுன் லீலரத்ன 52*, செனுத்த விக்ரமசிங்க 50

முடிவு இலங்கை கடற்படை விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி


குருநாகல் இளையோர் விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம் 

குருநாகல் இளையோர் விளையாட்டுக் கழகம் – 181 (48.4) – தரிந்து விஜேசிங்க 50, ஹஷான் பிரபாத் 36, கல்ஹான் சினெத் 33, சரித் மெண்டிஸ் 20, எச்.ஆர்.சி. டில்ஷான் 5/27, தரிந்து ரத்னாயக்க 4/34

சோனகர் விளையாட்டுக் கழகம் – 182/7 (30.2) – சாமர சில்வா 45, சுபேஷல ஜயதிலக்க 41, சரித்த குமாரசிங்க 35, தரிந்து ரத்னாயக்க 33*, கல்ஹான் சினெத் 2/24, கேஷான் விஜேரத்ன 2/74

முடிவு சோனகர் விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி 


இலங்கை இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்   

இலங்கை இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 185 (47.2) – லியோ பிரான்சிஸ்கோ 48, டில்ஷான் டி சொய்சா 43, அஜந்த மெண்டிஸ் 32, ஜானக்க சம்பத் 26*, கயான் சிரிசோம 4/45, ஹர்ஷ ரஜபக்ஷ 3/15

காலி கிரிக்கெட் கழகம் – 133 (34.1) – ஹர்ஷ ராஜபக்ஷ 42, அருன தர்மசேன 20, டில்ஷான் டி சொய்சா 5/33, ஜானக்க சம்பத் 2/11, சீக்குகே பிரசன்ன 2/47

முடிவு இராணுவப்படை கிரிக்கெட் கழகம் 52 ஓட்டங்களால் வெற்றி 


NCC எதிர் இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம்      

NCC – 210 (46.1) – சதுரங்க டி சில்வா 101, மஹேல உடவத்த 22, எஸ்.எல். பெரனாண்டோ 3/35, திலிப் தாரக்க 3/46

இலங்கை விமானப்படை விளையாட்டுக் கழகம் – 68 (19.3) – சச்சிந்த பீரிஸ் 6/36, சதுரங்க டி சில்வா 4/08

முடிவு NCC அணி 142 ஓட்டங்களால் வெற்றி


கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 318/7 (50) – ஹஷான் துமிந்து 101, அவிஷ்க பெர்னாண்டோ 100, பிரியமால் பெரேரா 31, விஷாத் ரந்திக்க 28*, சதீர சமரவிக்ரம 20, ரஜீவ வீரசிங்க 3/52, கீத் குமார 2/73

லங்கன் கிரிக்கெட் கழகம் – 133 (39.5) – நவீன் கவிகார 26, ரஜீவ வீரசிங்க 22*, யஷான் சமரசிங்க 20, டில்ருவன் பெரேரா 3/11, ஹஷான் துமிந்து 2/06, நிசல தாரக்க 2/44

முடிவு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 185 ஓட்டங்களால் வெற்றி

டெஸ்ட் அரங்கில் இருந்து ஏமாற்றத்துடன் விடைபெற்ற நட்சத்திரங்கள்

சில்வாவின் பொறுப்பான ஆட்டத்தால் குறித்த டெஸ்டில் இலங்கை அணி 215…


ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 242/8 (50) – அதீஷ நாணயக்கார 106, லஹிரு ஜயகொடி 43, நிசல் பிரான்சிஸ்கோ 41, பிரமோத் மதுஷான் 3/60

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 244/8 (47.2) – தனஞ்சய டி சில்வா 122, மனோஜ் சரத்சந்திர 46, ரமித் ரம்புக்வெல்ல 33, ரமேஷ் மெண்டிஸ் 4/35, அனுக் பெர்னாண்டோ 3/37

முடிவு தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றி 


 BRC எதிர் பொலிஸ் கிரிக்கெட் கழகம் 

BRC – 258/9 (50) – சுராஜ் ரன்திவ் 53*, லிசுல லக்ஷான் 53, ருமேஷ் புத்திக்க 39, திலகரத்ன சம்பத் 30, டேஷான் டயஸ் 25, மஹேஷ் பிரியதர்ஷன 3/59

பொலிஸ் கிரிக்கெட் கழகம் 226 (45.3) – ஹசித்த நிர்மல 64, மஹேஷ் பிரியதர்ஷன 32, மஞ்சுல ஜயவர்தன 25, நிமேஷ் விமுக்தி 24*, சிறிமத விஜேரத்ன 23, சுராஜ் ரன்திவ் 4/38, விகும் சஞ்சய 2/42  

முடிவு   BRC அணி 32 ஓட்டங்களால் வெற்றி