Home Tamil சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு த்ரில் வெற்றி

சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு த்ரில் வெற்றி

3309

தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிக்கெதிராக நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, முத்தரப்பு ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது

சம்மு அஷான், அஷேன் பண்டாரவின் அதிரடியுடன் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு முதல் வெற்றி

தென்னாபிரிக்கா வளர்ந்து வரும் அணிக்கு எதிரான முத்தரப்பு…..

தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் அணிக்கெதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

இந்த நிலையில், தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிக்கும், இலங்கை வளர்ந்துவரும் அணிக்குமிடையிலான 2ஆவது லீக் போட்டி நேற்று (02) பிரிட்டோரியாவில் உள்ள க்ரோவன்குளூப் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.  

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணித் தலைவர் நீல் ப்ரேண்ட் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே பந்துவீச்சில் மிரட்டியது. முதலாவது விக்கெட்டாக நீல் ப்ரேண்ட் ஓட்டமின்றியும், லெசிகோ செனொக்வானே 9 ஓட்டங்களுடன் அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்

இதற்கு அடுத்தப்படியாக கபிலோ செகுகுனே (17), ஹனோ கொட்சே (16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அவிஷ்க மற்றும் மாலிங்கவால் இலங்கைக்கு த்ரில் வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில்……

இதனால், ஆரம்பத்திலேயே தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி 69 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த டெலானோ போட்கீட்டர் மற்றும் இஸ்மாயில் கபீல்டீன் ஆகியோர் பொறுமையான ஒரு இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர். இருவரும் ஆறாவது விக்கெட்டுக்காக 163 ஓட்டங்களைப் பகிர்ந்து நம்பிக்கை கொடுத்தனர்.  

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஸ்மாயில் கபீல்டீன் 55 ஓட்டங்களுடன் சாமிக்க கருணாரத்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெலானோ போட்கீட்டர் சதம் அடித்து (124) நம்பிக்கை கொடுத்தார்

இறுதியில் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களைக் குவித்தது.

பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும், சாமிக்க கருணாரத்ன 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 269 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி களமிறங்கியது

சனத் ஜயசூரியவுக்கு ஓர் உணர்வுபூர்வமான அழைப்பு

ஒருநாள் ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர்……

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சதுன் வீரக்கொடி மற்றும் சங்கீத் குரே ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இருவரும் 74 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது, சங்கீத் குரே 36 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்

இதன் பின்னர் சற்று நிதான இணைப்பாட்டத்தை வழங்கிய சந்துன் வீரக்கொடி 45 ஓட்டங்களை பெற்று, ருவான் டி ஸ்வார்ட்டின் பந்தில் போல்ட் ஆனார்.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மினோத் பானுக்க 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், அணித் தலைலவர் சரித் அசலங்க மற்றும் சம்மு ஷான் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களைக் குவித்தனர்.

இவ்விரண்டு வீரர்களும் 4ஆவது விக்கெட்டுக்காக 49 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுச்சேர்க்க, சம்மு அசான் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது நீல் ப்ரேண்டடின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

இதன்பின்னர் மத்திய வரிசையில் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் (35), அஷேன் பண்டார (24) ஆகியோர் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு வலுச்சேர்த்தனர். எனினும், இவ்விரண்டு வீரர்களினது ஆட்டமிழப்பினைத் தொடர்ந்து இலங்கை அணி நெருக்கடிக்கு முகங்கொடுத்தது.  

இப்படியான ஒரு நிலையில், லஹிரு மதுஷங்கவுடன் 8ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த சாமிக்க கருணாரத்ன அதிரடியாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்

ஆப்கான், பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே கைகலப்பு – ஐ.சி.சி விசாரணை

லீட்ஸ் நகரில் நேற்று (29) நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும்…..

இறுதியில் சாமிக்க கருணாரத்ன ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட 19 ஓட்டங்களுடன் 2 பந்துகள் எஞ்சியிருக்க இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது

இதன்படி, இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, 48.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ஓட்டங்களை எடுத்து இந்தத் தொடரில் இரண்டாவது வெற்றியை ருசித்தது

இதேநேரம், தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணியின் பந்துவீச்சில் டில்ஷான் டெலானோ போட்கீட்டர் 3 விக்கெட்டுகளையும், சியா சிமெட்டு மற்றும் ருவான் டி ஸ்வார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்

இதன்படி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்ற இலங்கை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது

இதுஇவ்வாறிருக்க, mohoதென்னாபிரிக்கா விளையாட்டு பல்கலைக்கழக மற்றும் தென்னாபிரிக்கா வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான 3ஆவது லீக் போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி டுக்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம் 

Result


Sri Lanka Emerging Team
271/8 (49.4)

University Sports South Africa XI
268/6 (50)

Batsmen R B 4s 6s SR
Neil Brand lbw b Asitha Fernando 0 2 0 0 0.00
Kabelo Sekhukhune lbw b Asitha Fernando 17 25 4 0 68.00
Lesego Senokwane c Minod Bhanuka b Asitha Fernando 9 14 2 0 64.29
Hanno Kotze lbw b Amila Aponso 16 26 2 0 61.54
Rubin Hermann b Chamika Karunarathne 14 33 1 0 42.42
Delano Potgieter not out 124 111 10 6 111.71
Isma-eel Gafieldien c Asitha Fernando b Chamika Karunarathne 55 78 4 0 70.51
Ruan de Swardt not out 22 12 2 1 183.33


Extras 11 (b 5 , lb 2 , nb 1, w 3, pen 0)
Total 268/6 (50 Overs, RR: 5.36)
Fall of Wickets 1-0 (0.2) Neil Brand, 2-22 (4.2) Lesego Senokwane, 3-31 (8.1) Kabelo Sekhukhune, 4-52 (13.3) Hanno Kotze, 5-66 (18.2) Rubin Hermann, 6-229 (46.3) Isma-eel Gafieldien,

Bowling O M R W Econ
Asitha Fernando 10 1 51 3 5.10
Lahiru Madushanka 10 1 49 0 4.90
Amila Aponso 10 1 53 1 5.30
Chamika Karunarathne 10 1 59 2 5.90
Kamindu Mendis 3 0 18 0 6.00
Charith Asalanka 7 0 33 0 4.71


Batsmen R B 4s 6s SR
Sangeeth Cooray b Ruan de Swardt 45 57 4 0 78.95
Sandun Weerakkody c Beyers Swanepoel b Siya Simetu 36 62 5 0 58.06
Minod Bhanuka c Beyers Swanepoel b Siya Simetu 18 24 2 0 75.00
Charith Asalanka c Beyers Swanepoel b Ruan de Swardt 36 51 2 0 70.59
Sammu Ashan c & b Neil Brand 22 31 0 1 70.97
Kamindu Mendis c Ruan de Swardt b Delano Potgieter 35 37 2 1 94.59
Ashen Bandara c Neil Brand b Delano Potgieter 24 22 0 0 109.09
Lahiru Madushanka lbw b Delano Potgieter 14 6 0 2 233.33
Chamika Karunarathne not out 19 10 1 1 190.00
Amila Aponso not out 1 1 0 0 100.00


Extras 21 (b 5 , lb 8 , nb 3, w 5, pen 0)
Total 271/8 (49.4 Overs, RR: 5.46)
Fall of Wickets 1-74 (16.1) Sangeeth Cooray, 2-113 (22.6) Sandun Weerakkody, 3-116 (24.1) Minod Bhanuka, 4-165 (34.2) Sammu Ashan, 5-185 (39.5) Charith Asalanka, 6-234 (46.2) Kamindu Mendis, 7-236 (46.5) Ashen Bandara, 8-263 (48.6) Lahiru Madushanka,

Bowling O M R W Econ
Gideon Peters 9.4 0 60 0 6.38
Beyers Swanepoel 10 0 38 0 3.80
Ruan de Swardt 9 0 57 1 6.33
Delano Potgieter 10 0 56 3 5.60
Siya Simetu 4 0 13 2 3.25
Neil Brand 5 0 23 1 4.60
Lesego Senokwane 2 0 13 0 6.50



>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<