இங்கிலாந்து அணிக்கெதிரான உள்ளக டெஸ்ட் தொடர் இலங்கை வசம்

375

இலங்கை உள்ளக கிரிக்கெட் அணிக்கும், இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணிக்குமிடையில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் எஞ்சியிருக்க, 4ஆவது டெஸ்ட் போட்டியில் 5 ஓட்டங்களால் பெற்ற அபார வெற்றியுடன் 40 என இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

தலவத்துகொடையிலுள்ள ஓஸ்டேசியா சர்வதேச உள்ளக கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுமுன்தினம்(06) ஆரம்பமான 6 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிகளைப் பதிவுசெய்து முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து அணிக்கெதிரான உள்ளக டெஸ்ட்டில் இலங்கை இலகு வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து…

இந்நிலையில், போட்டித் தொடரின் 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகள் இதே உள்ளக மைதானத்தில் நேற்று(07) நடைபெற்றன. இதில் 3ஆவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 16 ஓவர்கள் நிறைவில் 83 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.  இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய சல்மான் பாரிஸ்(17), ருவன் தலகலகே(16) மற்றும் கிரிஷாந்த பீரிஸ்(15) ஆகியோர் ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் அனிஷ் பட்டேல் 2 ஓவர்களை பந்துவீசி 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணி, ஆரம்பம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது.

இதன்படி, அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் நிறைவில் 19 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 64 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சிலும் அசத்திய இலங்கை அணியின் தலைவரும், இடதுகை சுழற்பந்து வீச்சாளருமான கமல் குருப்பு, 2 ஓவர்கள் பந்துவீசி 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்தார். அத்துடன் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி 83(16) – சல்மான் பாரிஸ் 17, ருவன் தலகலகே 16, கிரிஷாந்த பீரிஸ் 15, அனிஷ் பட்டேல் 3/-9

இங்கிலாந்து அணி 19(16) – டி. ரோ 13, கமல் குருப்பு 5/23, ருவன் தலகலகே 2/0

முடிவு இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி 64 ஓட்டங்களால் வெற்றி

லங்கன் ப்ரீமியர் லீக் தொடரில் முக்கிய பொறுப்பை ஏற்கும் ஆர்னோல்ட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை…

இலங்கைஇங்கிலாந்து 4ஆவது டெஸ்ட் போட்டி

தொடரின் தீர்மானமிக்க 4ஆவது டெஸ்ட் போட்டியில் இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணி வெறும் 5 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி, தொடரையும் இழந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இலங்கை அணியை துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி, முதலில் டிய இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி, 16 ஓவர்களில் நிறைவில் 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிக்காக இறுதி செட் நான்கு ஓவர்களுக்காக தரிந்து மெண்டிஸ் மற்றும் என்டி சொலமன்ஸ் ஜோடி 39 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று வலுச்சேர்த்திருந்தனர். இதில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய தரிந்து மெண்டிஸ் 26 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் சேம் ஸ்டக்ஸ் 4 விக்கெட்டுக்களையும், முபீன் ராஷித் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து உள்ளக கிரிக்கெட் அணி, ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டது. அவ்வணிக்காக பந்துவீச்சில் அசத்திய சேம் ஸ்டக்ஸ். துடுப்பாட்டத்திலும் பிரகாசித்து பெறுமதிமிக்க 27 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

எனினும், போட்டியின் இறுதி செட் நான்கு ஓவர்களுக்காக களமிறங்கிய முபீன் ராஷித்(18) மற்றும் லுக்கி கன்(17) ஜோடி அதிரடியாக துடுப்பெடுத்தாடி 35 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்ட போதிலும், அது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு சாதகமாக அமையவில்லை.

இறுதியில், அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் நிறைவில் 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்று வெறும் 5 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இதன்படி 6 போட்டிகளைக் கொண்ட உள்ளக டெஸ்ட் போட்டித் தொடரில் இலங்கை அணி 40  என தொடரைக் கைப்பற்றி முன்னிலை பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக சேம் ஸ்டக்ஸ் தெரிவானார்.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான 5ஆவது மற்றும், 6ஆவது டெஸ்ட் போட்டிகள் இதே உள்ளக கிரிக்கெட் மைதானத்தில் இன்று(08) நடைபெறவுள்ளது.

ஐ.பி.எல்லை கைவிட்டு இலங்கை சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் ஸ்டெயின், ரபாடா

தென்னாபிரிக்க அணியின்…

நான்காவது டெஸ்ட் போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி 96(16) – தரிந்து மெண்டிஸ் 21, பொன்சேகா 20, சேம் ஸ்டக்ஸ் 4/-12, முபீன் ராஷித் 3/-12

இங்கிலாந்து அணி 91(16) – சேம் ஸ்டக்ஸ் 27, முபீன் ராஷித் 18, மல்ஷான் ரொட்ரிகோ 2/-3, தரிந்து மெண்டிஸ் 2/-15

முடிவு இலங்கை உள்ளக கிரிக்கெட் அணி 5 ஓட்டங்களால் வெற்றி

இதேவேளை, இதே மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அபிவிருத்தி உள்ளக அணிகளுக்கிடையில் நேற்று(07) நடைபெற்ற 3ஆவது மற்றும் 4ஆவது உள்ளக டெஸ்ட் போட்டியில் இலங்கை அபிவிருத்தி அணி, முறையே 20 மற்றும் 3 ஓட்டங்களால் வெற்றிகளைப் பதிவுசெய்து தொடரைக் கைப்பற்றியது.

அத்துடன், இங்கிலாந்து மாஸ்டர்ஸ் உள்ளக கிரிக்கெட் அணிக்கெதிராக நடைபெற்ற 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டியிலும் முறையே 107 மற்றும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் உள்ளக அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.