ஜிம்பாப்வே ஒரு நாள் அணியில் மீண்டும் நட்சத்திர வீரர்கள்

707

இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களான நொட்டிங்கம்ஷெயார் மற்றும் லங்கஷெயார் அணிகளுக்கு விளையாடி வந்த ஜிம்பாப்வே ணியின் முன்னாள் தலைவரான பிரெண்டன் டெய்லர் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜார்விஸ் ஆகிய வீரர்கள் மீண்டும் ஜிம்பாப்வே ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

[rev_slider LOLC]

அணித் தலைவராகவுள்ள மெதிவ்ஸ் உடற்தகுதி சோதனையில் தேர்வு

ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (07) நடைபெற்ற உடற்தகுதி சோதனையை இலங்கை கிரிக்கெட்…

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளின் பங்குபற்றலுடன் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட ஜிம்பாப்வே குழாம் நேற்று (07) அறிவிக்கப்பட்டது.  

இதன்படி, ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவரான பிரெண்டன் டெய்லர் 3 வருடங்களின் பிறகும், வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜார்விஸ் 5 வருடங்களுக்குப் பிறகும் மீண்டும் ஜிம்பாப்வே ஒரு நாள் அணிக்காக விளையாவுள்ளனர்.

எனினும், குறித்த இரு வீரர்களும் அண்மையில் நிறைவடைந்த தென்னாபிரிக்க அணியுடனான 4 நாள் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முத்தரப்பு தொடருக்காக அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் 20 வயதான சகலதுறை ஆட்டக்காரரான பிரெண்டன் மவுடா மற்றும் 19 வயதுடைய விக்கெட் காப்பாளரான ரையர்ன் முர்ரே ஆகியோர் முதற்தடவையாக ஜிம்பாப்வே ஒரு நாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவ்விரு வீரர்களும் ஜிம்பாப்வேயின் நடைபெற்ற 2 முதல்தரப் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கடந்த வருடம் இலங்கை அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை வென்று கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த 28 வயதான ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், மித வேகப்பந்து வீச்சாளருமான சொலமன் மிர்ரே மீண்டும் ஜிம்பாப்வே அணிக்கு திரும்பியுள்ளார்.  

அதேநேரம் அண்மையில் நிறைவடைந்த தென்னாபிரிக்க அணியுடனான 4 நாள் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான 21 வயதான பிளெசிங் முசரபானியும் முதற்தடவையாக ஜிம்பாப்வே ஒரு நாள் அணிக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷில் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் திடீர் மாற்றம்

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளின் பங்குபற்றலுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பங்களாதேஷில்…

2019 உலகக் கிண்ணப் போட்டிளுக்கான தகுதிகாண் போட்டிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக பங்களாதேஷில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒரு நாள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரும் ஜிம்பாப்வே அணிக்கு சிறந்த பயிற்சியாக அமையவுள்ளது.

அதிலும் குறிப்பாக, ஜிம்பாப்வே அணியில் அண்மைக்காலமாக அணித் தலைவர் கிரஹம் கிரீமர், சிகெண்டர் ராசா மற்றும் க்ரெய்க் ஏர்வின், ஹெமில்டன் மசகட்சா உள்ளிட்ட வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன் பிரென்டண் டெய்லர் மற்றும் கைல் ஜார்விஸின் வருகையானது 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, 2016ஆம் ஆண்டு முதல் ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்ற தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மகாயா நிடினி, தனது பதவியை நேற்று இராஜினாமாச் செய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், பொறுப்பில் இருந்து நானாக இராஜினாமா செய்யவில்லை. ஜிம்பாப்வே அணியினருக்கு எனது பயிற்சி முறையில் திருப்தி இல்லை. ஜிம்பாப்வே கிரிக்கெட் சபை கேட்டுக் கொண்டதால் பதவியை இராஜினாமா செய்தேன் என்றார். இதன்படி, முத்தரப்பு தொடரில் பங்கேற்கவுள்ள ஜிம்பாப்வே அணியுடன் அவர் இணைந்துகொள்ளமாட்டார் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

முத்தரப்பு தொடருக்கான ஜிம்பாப்வே குழாம்

ஹெமில்டன் மசகட்சா, சொலமன் முர்ரே, க்ரெய்க் ஏர்வின், பிரெண்டன் டெய்லர், சிகெண்டர் ராசா, பீடர் மோர், மெல்கோம் வோலர், கிரஹம் கிரீமர் (அணித் தலைவர்), ரையான் முர்ரே, டெண்டாய் ச்சிசோரோ, பிரெண்டன் மவுடா, பிளெசிங் முசரபானி, கிரிஸ்டோபர் மொபு, தென்டாய் சடாரா மற்றும் கைல் ஜார்விஸ்