இலங்கை கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்ப ஏழு திட்டங்கள் அறிவிப்பு

1506

இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான ஏழு அம்சங்களை உள்ளிடக்கிய திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இது குறித்து விவாதிக்க கடந்த 27ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்படுத்தப்படும் அதிரடி மாற்றங்கள்! 

இந்த கலந்துரையாடலில், இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய செயல்திறன், வீரர்களின் முகாமைத்துவம் மற்றும் கிரிக்கெட் அணிக்கான வீரர்களை முறையாக தேர்ந்தெடுப்பதில் வீரர்களின் செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் அதன் தற்போதைய வழிமுறைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. 

எனவே விளையாட்டுத்துறை அமைச்சினால் கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ள 7 புதிய திட்டங்களையும் கீழே பார்க்கலாம்

1.தற்போதுள்ள தேர்வுக் குழுவைக் கருத்தில் கொண்டு புதிய தேர்வுக் குழுவை நியமிக்கவும்.

2.தற்போதைய முதல்தர கிரிக்கெட் போட்டி மற்றும் அதன் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 8 அணிகள் மற்றும் அதிகபட்சம் 14 அணிகள் டியர்-1 பிரிவில் உள்ளடக்குதல், டியர்-1 முதல் பிரிவின் கீழும், டியர்-2 முதல் பிரிவில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுத்தல். 

3.புதிய வடிவில் மாகாணங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்தல். அதற்காக ஐந்து அணிகளைச் சேர்ப்பது மற்றும் ப்ரீமியர் டியர் 1/2 விளையாட்டுக் கழகம் மற்றும் பிற விளையாட்டுக் கழகங்களைக் குறிக்கும் அணிகளை உருவாக்குதல்.

4.தேசிய கிரிக்கெட் அணியில் நியமிக்கப்பட வேண்டிய உயர் தகுதி வாய்ந்த மற்றும் தகுதியான அதிகாரிகளை அடையாளம் காணுதல். (அணியின் ஆலோசகர், பயிற்றுவிப்பாளரின் நியமனம், கிரிக்கெட் இயக்குநர், முழுநேர முகாமையாளர்)

வீரர்களுக்கு திறமை அடிப்படையில் கொடுப்பனவுகள் வழங்க திட்டம்

5.விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் ஒப்பந்தங்களை வடிவமைப்பதில் அவர்களை ஊக்கப்படுத்தும் நடைமுறையை அவதானம் செலுத்தல். இங்கே அவர்களின் தனிப்பட்ட திறமைகள் மற்றும் தொடர்ச்சியான ஒழுக்கம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.

6.இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் ஊடாக வீரர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் உடல் தகுதி மற்றும் ஒழுக்கம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும்.

7.தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் கட்டமைப்பை தயாரிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதிவாய்ந்த கிரிக்கெட் குழுவொன்றை பரிந்துரைத்தல்

இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கும், தேசிய அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தருக்கும் இடையே பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<