அழைப்பு T20 தொடரின் இறுதிப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ், கொழும்பு கிரிக்கெட் கழக அணிகள்

48

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் அழைப்பு T20 தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இரண்டும் இன்று (19) கட்டுநாயக்கவில் நிறைவுக்கு  வந்தன.

அவிஷ்கவின் அதிரடி வீண்; பந்துவீச்சில் பிரகாசித்த மாலிங்க, திசர

இலங்கை கிரிக்கெட் சபை, உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் அழைப்பு T20…

அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்திருக்கும் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் மற்றும் கொழும்பு கிரிக்கெட் கழகம் ஆகியவை அழைப்பு T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றன.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

அழைப்பு T20 தொடரின் முதல் அரையிறுதியில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், றாகம கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 33 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்தது.

போட்டியில் றாகம அணியினால் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை எடுத்தது.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பில் லசித் குரூஸ்புள்ளே 67 ஓட்டங்கள் எடுக்க, உதார ஜயசுந்தர றாகம கிரிக்கெட் கழகத்திற்காக 16 ஓட்டங்களை விட்டுத்தந்து 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

Photos: Chilaw Marians CC vs Ragama CC | SLC Invitation T20 Tournament 2019/20 – SF 1

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 169 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய றாகம கிரிக்கெட் கழகம் 19 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 135 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வி அடைந்தது.

றாகம கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பாக உதார ஜயசுந்தர 35 ஓட்டங்கள் பதிவு செய்ய, புலின தரங்க 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சிலாப மேரியன்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் சிலாப மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் அழைப்பு T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக மாறியது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 168/8 (20) லசித் குரூஸ்புள்ளே 67, உதார ஜயசுந்தர 4/16

றாகம கிரிக்கெட் கழகம் – 135 (19) உதார ஜயசுந்தர 35, புலின தரங்க 3/18

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 33 ஓட்டங்களால் வெற்றி 

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் NCC

அழைப்பு T20 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம், NCC அணிக்கு எதிராக 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய கொழும்பு கிரிக்கெட் கழகம், 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 144 ஓட்டங்கள் பெற்றது. 

பாகிஸ்தானை எதிர்கொள்ளும் பங்களாதேஷ் டி20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு…

கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் துடுப்பாட்டம் சார்பில் மலிந்து மதுரங்க 38 ஓட்டங்கள் பெற, வனிந்து ஹஸரங்க 33 ஓட்டங்கள் பெற்றார். இதேநேரம், NCC அணியின் பந்துவீச்சு சார்பில் சாமிக்க குணசேகர 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 145 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய NCC அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினை தழுவியது.

Photos: NCC vs CCC | SLC Invitation T20 Tournament 2019/20 – SF 2

NCC அணியின் துடுப்பாட்டம் சார்பில் லஹிரு உதார 65 ஓட்டங்கள் பெற்று போராட்டத்தை காண்பித்த போதும் அவரது துடுப்பாட்டம் வீணானது. கொழும்பு கிரிக்கெட் கழக அணியின் பந்துவீச்சு சார்பில் மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் கொழும்பு கிரிக்கெட் கழகம் அழைப்பு T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான இரண்டாவது அணியாக மாறியது

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 144 (20) மலிந்து மதுரங்க 38, வனிந்து ஹஸரங்க 33, சாமிக்க குணசேகர 4/23

NCC – 134/8 (20) லஹிரு உதார 65, மலிந்த புஷ்பகுமார 2/25

முடிவு – NCC கிரிக்கெட் கழகம் 10 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<