புதிய செயலியை அறிமுகப்படுத்தும் இலங்கை கிரிக்கெட்!

Sri Lanka Cricket’s Official Mobile App

48

இலங்கை கிரிக்கெட் சபை “ஸ்ரீலங்கா கிரிக்கெட் லைவ்” (Sri Lanka Cricket Live) என்ற பெயரில் தங்களுடைய உத்தியோகபூர்வமான செயலி (App) ஒன்றிணை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு இந்த செயலியினை பயன்படுத்த முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. 

இரண்டாவது T20 போட்டியில் இலங்கை U19 மகளிர் அபார வெற்றி

இந்த செயலியின் மூலமாக நேரடி ஓட்ட விபரங்கள், நேரடி ஒளிபரப்பு, போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி, போட்டி அட்டவணைகள், முடிவுகள் மற்றும் கிரிக்கெட் சபையுடன் தொடர்புடைய குழாம் அறிவிப்பு, செய்திகள் போன்றவற்றை ரசிகர்கள் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த இந்த செயலியை கூகுல் பிளே ஸ்டோர் மற்றும் எப் ஸ்டோர் போன்றவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

செயலியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் 

Link: https://srilankacricket.lk/mobile-app/  

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<