அவுஸ்திரேலிய அணிக்குழாத்துடன் இணையும் மெதிவ் குஹ்னமேன்

115

இந்திய அணிக்கெதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இடதுகை சுழல்பந்துவீச்சாளரான மெதிவ் குஹ்னமேன் இணைந்திருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனது பரிந்துரையில் தான் சர்பராஸ் அணியில் இடம்பிடித்தார் – ரிஸ்வான்

அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாத்தில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டிருந்த மணிக்கட்டு சுழல்பந்துவீச்சாளரான மிச்சல் ஸ்வப்சன் தனது குழந்தையின் பிரசவத்திற்காக அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் திரும்பவிருக்கும் நிலையில், மிச்சல் ஸ்வெப்சனின் பிரதியீட்டு வீரராக மெதிவ் குஹ்னமேன் ஆஸி. டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.

இந்திய – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி டெல்லியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மெதிவ் குஹ்னமேன் மிக விரைவில் ஆஸி. டெஸ்ட் குழாத்துடன் மிக விரைவில் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை அவுஸ்திரேலியா – இந்தியாவுடன் விளையாடவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க்கும் காயத்தில் இருந்து குணமடைந்ததனை அடுத்து இணைவார் என நம்பப்படுகின்றது.

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெறாத மெதிவ் குஹ்னமேன் 13 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அதேநேரம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் மீதமிருக்க இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<