பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இலங்கை மகளிர் 19 வயதின் கீழ் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை மகளிர் அணி 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
>>இலங்கை தொடருக்கான திட்டங்களை ஆரம்பித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி
எனினும் அணித்தலைவி மனுதி நாணயக்கார மற்றும் தஹமி செனத்மா ஆகியோர் 59 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். மனுதி நாணயக்கார சிறப்பாக செயற்பட்டு ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக அரைச்சதம் கடந்தார்.
இவருடன் தஹமி 25 ஓட்டங்களையும், ரஷ்மிகா செவ்வந்தி 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பின்னர் தங்களுடைய இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. அசேனி தலகுனே மற்றும் சமோதி பிரபோதா ஆகியோர் அபாரமாக பந்துவீச ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 35 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. அதனை தொடர்ந்து சாடியா அக்தர் மற்றும் பர்ஜானா எஸ்மின் ஆகியோர் 22 ஓட்டங்களை பகிர்ந்தனர். எனினும் 13 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் அணியால் 60 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசேனி தலகுனே மற்றும் சமோதி பிரபோதா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், லிமன்சா திலகரட்ன 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சுருக்கம்
இலங்கை மகளிர் U19 125/4 (20) மனுதி நாணயக்கார 50, ரஷ்மிகா செவ்வந்தி 27*, தஹமி செனத்மா 25, சுமுது நிசன்சலா 13*, நிசிதா அக்தர் 2/7
பங்களாதேஷ் மகளிர் U19 60 (20) சாடியா அக்தர் 18, பர்ஜானா எஸ்மின் 10*, சமோதி பிரபோதா 3/13, அசேனி தலகுனே 3/14, லிமன்சா திலகரட்ன 2/14
முடிவு – இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணி 65 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<