இமாலய ஓட்டங்களை குவித்து போட்டியை சமப்படுத்திய இலங்கை அணி

Sri Lanka Emerging team tour of England 2022

3219

கெண்ட் கிரிக்கெட் கழகம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி பதினொருவர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 4 நாட்கள் கொண்ட போட்டி சமனிலையில் நிறைவுக்குவந்துள்ளது.

போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேர நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 573 ஓட்டங்களை பெற்றிருந்த இலங்கை  அணி, இறுதிநாளான இன்று (09) 658/9d ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்த, கெண்ட் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 200 ஓட்டங்களை பெற்றிருந்தபோது, ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

>>இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதவிருந்த ஒருநாள் தொடர் இரத்து

நான்காவது நாளான இன்று 22 ஓட்டங்கள் பின்னடைவில் களமிறங்கிய இலங்கை அணிக்கு சந்துஷ் குணதிலக்க மற்றும் யசிரு ரொட்ரிகோ ஆகியோர் பெறுமதியான ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். சந்துஷ் குணதிலக்க இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, யசிரு ரொட்ரிகோ 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை பொருத்தவரை நிசான் மதுஷ்க 269 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், லசித் குரூஸ்புள்ளே 136 ஓட்டங்களையும், நுவனிந்து பெர்னாண்டோ 99 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்திருந்தனர். கெண்ட் அணியின் பந்துவீச்சில் ஜோர்ஜ் லிண்டே, மெக்ஸ் லக்கட் மற்றும் டெரன் ஸ்டீவன்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் 85 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களுடைய இரண்டாவது இன்கிங்ஸை தொடர்ந்த கெண்ட் அணி ஆட்டநேர நிறைவின்போது 48.3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில், மார்கஸ் ஓரியோர்டன் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும், தவண்டா முயே 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, ஜோ டென்லி 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் டிலும் சுதீர ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

அதேநேரம் இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியிருந்த கெண்ட் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 595 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதில் டெரன் ஸ்டீவன்ஸஸ் 168 ஓட்டங்கள், ஜோர்ஜ் லிண்டே 107 ஓட்டங்கள் மற்றும் பில்லி மீட் 106* ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தனர்.  இலங்கை அணியின் பந்துவீச்சில் தனன்ஜய லக்ஷான், யசிரு ரொட்ரிகோ மற்றும் உதித் மதுசான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

இதேவேளை, இந்தப்போட்டி சமனிலையடைந்துள்ள நிலையில் இரண்டாவது போட்டி எதிர்வரும் 13ம் திகதி ஹெம்ஷையரில் உள்ள ஏஜஸ் போவ்ல் மைதனாத்தில் நடைபெறவுள்ளது.

சுருக்கம்

  • கெண்ட் கிரிக்கெட் கழகம் – 595/8d (137), டெரன் ஸ்டீவன்ஸ் 168, ஜோர்ஜ் லிண்டே 107, பில்லி மீட் 106*, தனன்ஜய லக்ஷான் 106/2, உதித் மதுசான் 109/2, யசிரு ரொட்ரிகோ 90/2
  • இலங்கை பதினொருவர் – 573/6 (131), நிசான் மதுஷ்க 269, லசித் குரூஸ்புள்ளே 136, நுவனிந்து பெர்னாண்டோ 99, சந்துஷ் குணதிலக்க 58*, ஜோர்ஜ் லிண்டே 126/2, மெக்ஸ் லக்கட் 73/2, டெரன் ஸ்டீவன்ஸ் 80/2
  • கெண்ட் கிரிக்கெட் கழகம் (2வது இன்னிங்ஸ்) – 200/1 (48.3), மார்கஸ் ஓரியோர்டன் 102*, தவண்டா முயே 56, ஜோ டென்லி 41*, டிலும் சுதீர58/1
  • முடிவு – போட்டி சமனிலையில் முடிவடைந்தது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<