பங்களாதேஷ் மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் T20i தொடர்களுக்கான போட்டி அட்டவணை சீரற்ற காலநிலை காரணமாக மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி இன்றைய தினம் (2) சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது.
>>இலங்கை – இங்கிலாந்து மகளிர் போட்டி திகதிகளில் மாற்றம்
இந்தநிலையில் மழைக்காரணமாக கைவிடப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டியை எதிர்வரும் 4ம் திகதி நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகள் பி.சரா. ஓவல் மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது எஸ்.எஸ்.சி மைதானத்தில் மிகுதி உள்ள ஒருநாள் போட்டிகள் மாற்றப்பட்டுள்ளன.
அதேநேரம் T20i போட்டிகள் ஏற்கனவே திட்டமிட்டவாறு இம்மாதம் 09, 11 மற்றும் 12 திகதிகளில் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் 7ம் திகதி நடத்த திட்டமிட்டிருந்த பயிற்சிப்போட்டி கைவிடப்பட்டுள்ளது.
போட்டி அட்டவணை
- இரண்டாவது ஒருநாள் போட்டி – மே 4 – எஸ்.எஸ்.சி மைதானம்
- மூன்றாவது ஒருநாள் போட்டி – மே 7 – எஸ்.எஸ்.சி மைதானம்
- முதல் T20i போட்டி – மே 9 – எஸ்.எஸ்.சி மைதானம்
- இரண்டாவது T20i போட்டி – மே 11 – எஸ்.எஸ்.சி மைதானம்
- மூன்றாவது T20i போட்டி – மே 12 – எஸ்.எஸ்.சி மைதானம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<