ஆசிய கிண்ணத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஓரே குழுவில்

2236

இந்தியாவில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில் போட்டிக்கான மாதிரி அட்டவணை ஒன்றை ஆசிய கிரிக்கெட் கௌன்சில் (ACC) வெளியிட்டுள்ளது.

இதன்படி குழுநிலை போட்டிகளில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ள வேண்டியுள்ளதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் ஆசிய கிண்ண தொடர் இந்தியாவில் நடத்தவே ஏற்பாடாகி இருந்தது. எனினும் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுத்த நிலையிலேயே போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டன. இந்த அறிவிப்பை ஆசிய கிரிக்கெட் கௌன்சில் நிறைவேற்றுக் குழு கடந்த செவ்வாய்கிழமை (10) வெளியிட்டது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் வெற்றி பெறும் அணி என ஆறு அணிகள் இம்முறை ஆசிய கிண்ணத்தில் பங்குபற்றவுள்ளன. ஆசிய தகுதிகாண் போட்டிகளில் ஐக்கிய அரபு இராச்சியம், ஹொங்கொங், நேபாளம், சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஓமான் அணிகளில் இருந்தே ஆசிய கிண்ணத்தில் பங்குபெறும் ஆறாவது அணி தேர்வு செய்யப்படவுள்ளது.

இம்முறை ஆசியக் கிண்ணப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்

இந்தியாவில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2018ஆம் ஆண்டுக்கான…

14 ஆவது ஆசிய கிண்ண போட்டிகள் 2018 செப்டெம்பர் 13 தொடக்கம் 28 ஆம் திகதி வரை அபுதாபி மற்றும் டுபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்காக வெளியிடப்பட்டிருக்கும் அட்டவணையின்படி இலங்கை அணி B குழுவில் இடம்பெற்றிருப்பதோடு அந்த குழுவில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. சவாலான குழுவாக பிரிக்கப்பட்டிருக்கும் A குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. தகுதிகாண் போட்டியில் வெற்றிபெறும் அணியும் இந்த குழுவில் மூன்றாவது அணியாக இணைக்கப்படவுள்ளது.

செப்டெம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் குழுநிலை போட்டிகள் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றான ‘சுப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும். செப்டெம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் தலா ஒரு முறை பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மற்றுமொரு போட்டி நடைபெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ‘சுப்பர் 4’ சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டெம்பர் 30 ஆம் திகதி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ஆசிய கிண்ண போட்டிகளின் முதல் 12 தொடர்களும் ஒருநாள் போட்டிகளாகவே நடத்தப்பட்ட நிலையில் 2016ஆம் ஆண்டு தொடர் டி20 போட்டிகளாக இடம்பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி நடப்புச் சம்பியனாக உள்ளது.

இங்கிலாந்தின் போட்டிகளுக்கு தொலைக்காட்சி வர்ணனையாளராக சங்கக்கார

இங்கிலாந்தின் போட்டிகளுக்கு தொலைக்காட்சி வர்ணனையாளராக சங்கக்கார

இந்த ஆண்டின் கோடைகாலத்தில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா…

எனினும் இம்முறை ஆசிய கிண்ண தொடர் மீண்டும் ஒருநாள் போட்டிகளாக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் இலங்கையில் அண்மையில் நடந்த சுதந்திரக் கிண்ண டி20 போட்டியில் பங்களாதேஷுடனான கடைசி குழு நிலை போட்டியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டதன் பின்னர் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை எதிர்வரும் ஆசிய கிண்ண தொடரிலேயே முதல்முறை எதிர்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

 குழு நிலை

செப்டெம்பர் 18: பாகிஸ்தான் எதிர் தகுதி பெறும் அணி

செப்டெம்பர் 18: பங்களாதேஷ் எதிர் இலங்கை

செப்டெம்பர் 19: இந்தியா எதிர் தகுதி பெறும் அணி

செப்டெம்பர் 20: ஆப்கானிஸ்தான் எதிர் இலங்கை

செப்டெம்பர் 21: இந்தியா எதிர் பாகிஸ்தான்

செப்டெம்பர் 21: பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான்

சுப்பர் 4′ சுற்று 

செப்டெம்பர் 23: குழு A முதலிடம் எதிர் குழு B 2ஆம் இடம்

செப்டெம்பர் 24: குழு B முதலிடம் எதிர் குழு A 2ஆம் இடம்

செப்டெம்பர் 25: குழு A 2ஆம் இடம் எதிர் குழு B 2ஆம் இடம்

செப்டெம்பர் 26: குழு A முதலிடம் எதிர் குழு B முதலிடம்

செப்டெம்பர் 27: குழு A முதலிடம் எதிர் குழு A இரண்டாம் இடம்

செப்டெம்பர் 28: குழு B முதலிடம் எதிர் குழு B இரண்டாம் இடம்

செப்டெம்பர் 30: இறுதிப் போட்டி