பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை A அணியில் அசேல குணரத்ன

163

சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ள இலங்கை A அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் குழாம் இலங்கை கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. 

உத்தியோகபூர்வமற்ற இருதரப்பு தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற பங்களாதேஷ் A அணி, இலங்கை A அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. 

இலங்கை – பங்களாதேஷ் A அணிகளுக்கிடையிலான தொடர் அட்டவணை வெளியீடு

பங்களாதேஷ் A அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையில்…..

குறித்த சுற்றுப்பயணத்திற்கான பங்களாதேஷ் A அணியின் குழாம் நேற்று (17) வெளியிடப்பட்டிருந்த நிலையில் இலங்கை A அணியின் குழாம் இன்று (18) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வெளியிடப்பட்டுள்ள குழாமானது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கென தனியான இரு குழாம்களாக பெயரிடப்பட்டுள்ளன. 

இதேவேளை குறித்த இருதரப்பு தொடரில் பங்கேற்பதற்கான பங்களாதேஷ் A அணி இன்று (18) நண்பகல் இலங்கையை வந்தடைந்தது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை வளர்ந்துவரும் அணி பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியுடன் விளையாடியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இரு டெஸ்ட் போட்டிகளுக்குமான குழாம்

எதிர்வரும் திங்கட்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடருக்காக 19 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை A அணி இறுதியாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அணியிலிருந்து பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இருந்தாலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள குழாமின் அடிப்படையில் A அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படும் வகையில் அஷான் பிரியன்ஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய A அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய மூத்த வீரர்களான அகில தனன்ஜய மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் உத்தேச குழாம் அறிவிப்பு

இம்மாத இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள்….

இதேவேளை இறுதியாக A அணியில் இடம்பெற்ற லஹிரு குமார, பானுக்க ராஜபக்ஸ, சதீர சமரவிக்ரம மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் பாகிஸ்தான் தொடருக்கான குழாமில் இடம்பெற்றுள்ளதனால் தற்போது A அணியில் இடம்பெறவில்லை.

மேலும் இறுதியாக பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணியுடன் விளையாடிய இலங்கை வளர்ந்துவரும் அணியிலிருந்து பல வீரர்களுக்கும் தற்போது A அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொஹமட் சிராஸ், சங்கீத் குரே, சரித் அசலங்க, மனோஜ் சரத்சந்தர, மலிந்த புஷ்பகுமார, நிஷான் பீரிஸ் மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகிய வீரர்கள் டெஸ்ட் குழாமில் மாத்திரம் இடம்பெற்றுள்ளனர். 

டெஸ்ட் குழாம்

அஷான் பிரியன்ஜன் (அணித்தலைவர்), பெத்தும் நிசங்க, சங்கீத் குரே, லஹிரு உதார, கமிந்து மெண்டிஸ், பிரியமல் பெரேரா, அஷேன் பண்டார, மனோஜ் சரத்சந்தர, சரித் அசலங்க, ரமேஷ் மெண்டிஸ், நிஷான் பீரிஸ், மலிந்த புஷ்பகுமார, பிரபாத் ஜயசூரிய, விஷ்வ பெர்ணான்டோ, சாமிக கருணாரத்ன, அசித பெர்ணான்டோ, மொஹமட் சிராஸ், ஷிரான் பெர்ணான்டோ, ஜெப்ரி வெண்டர்ஸே

மூன்று ஒருநாள் போட்டிகளுக்குமான குழாம்.

இலங்கை வளர்ந்துவரும் அணியை சிறப்பாக வழிநடாத்தி வருவதன் காரணமாக இலங்கை A ஒருநாள் அணியின் தலைமைத்துவமும் அஷான் பிரியன்ஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரியன்ஜன் தலைமையிலான ஒருநாள் குழாமில் 17 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு குமார் சங்கக்காரவின் அறிவுரை

இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடுவது என்பது எமக்கு…..

இதில் இலங்கை தேசிய அணியில் ஒரு சகலதுறை வீரராக விளையாடிவந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு உபாதைக்குள்ளானதை தொடர்ந்து இலங்கை அணியில் உறுதியான இடம் கிடைக்காமல் காணப்பட்ட அசேல குணரத்ன தற்போது இலங்கை A ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். 

இறுதியாக இலங்கை வளர்ந்துவரும் அணியில் விளையாடிய பெத்தும் நிஸ்சங்க, அஷேன் பண்டார, கமிந்து மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், சாமிக கருணாரத்ன, அசித பெர்ணான்டோ, மற்றும் ஷிரான் பெர்ணான்டோ ஆகிய வீரர்கள் A அணியின் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றதை போன்று ஒருநாள் குழாமிலும் இடம்பெற்றுள்ளனர். 

இலங்கை தேசிய அணிக்காக விளையாடியுள்ள பிரியமல் பெரேரா, ஜெப்ரி வெண்டர்ஸே, விஷ்வ பெர்ணான்டோ ஆகியோருடன் லஹிரு உதாரவும் இரு குழாம்களிலும் இடம்பெற்றுள்ளனர். மேலும் சந்துன் வீரக்கொடி, சம்மு அஷான், அசேல குணரத்ன, இஷான் ஜயரத்ன மற்றும் அமில அபொன்ஸோ ஆகிய வீரர்கள் ஒருநாள் குழாமுக்கென தனியாக இடம்பெற்றுள்ளனர். 

இதேவேளை இந்திய A அணியுடன் விளையாடிய அகில தனன்ஜய, மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் தவறவிடப்பட்டுள்ள நிலையில், தனுஷ்க குணதிலக்க, ஷெஹான் ஜெயசூரிய, லஹிரு குமார, லக்ஷான் சந்தகன் மற்றும் தசுன் சானக்க ஆகியோர் பாகிஸ்தான் தொடரில் இடம்பெற்றுள்ளதன் காரணமாக தற்போது A அணியில் இடம்பெறவில்லை.

இந்திய மகளிர் அணியுடன் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட முயற்சித்த இருவர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஊழல் தடுப்பு பிரிவு….

ஒருநாள் குழாம்.

அஷான் பிரியன்ஜன் (அணித்தலைவர்), பெத்தும் நிஸ்சங்க, சந்துன் வீரக்கொடி, லஹிரு உதார, கமிந்து மெண்டிஸ், பிரியமல் பெரேரா, அஷேன் பண்டார, ரமேஷ் மெண்டிஸ், அமில அபொன்ஸோ, ஜெப்ரி வெண்டர்ஸே, விஷ்வ பெர்ணான்டோ, சாமிக கருணாரத்ன, அசித பெர்ணான்டோ, இஷான் ஜயரத்ன, ஷிரான் பெர்ணான்டோ, சம்மு அஷான், அசேல குணரத்ன

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<