இந்திய மகளிர் அணியுடன் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட முயற்சித்த இருவர்

52
©AFP

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஊழல் தடுப்பு பிரிவு (BCCI), போட்டி நிர்ணயத்தில்  ஈடுபட முயற்சித்த இரண்டு நபர்கள் தொடர்பான அவதானத்தை இந்த திங்கட்கிழமை (17) பெங்களூர் பொலிஸாரிடம் கொண்டுவந்திருக்கின்றது.

இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் உத்தேச குழாம் அறிவிப்பு

இம்மாத இறுதியில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை…

இந்த இரண்டு நபர்களும் இந்திய மகளிர் கிரிக்கெட்  அணியின் வீராங்கனை ஒருவருக்கு கடந்த பெப்ரவரி மாதம் பெரும் தொகை பணம் வழங்கி போட்டி நிர்ணயத்தில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டின் பெயரிலேயே, பெங்களூர் பொலிஸாரின் அவதானத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றனர். 

மேலும் இந்த இரண்டு நபர்களும் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்செயல், வரலாற்றில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஒருவருக்கு பணம் கொடுத்து கிரிக்கெட் போட்டி ஒன்றின் முடிவில் மாற்றங்களை கொண்டுவர முயற்சித்த முதல் சம்பவமாக பதிவாகியிருக்கின்றது. மேலும், இந்தக் குற்றச்சாட்டு  தொடர்பான விசாரணைகளை இந்தியாவின் மத்திய குற்றத்தடுப்பு பிரிவு (CCB) ஆரம்பித்துள்ளது. 

இந்திய பொலிஸ் வழங்கியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் ராகேஷ் பப்னா மற்றும் ஜித்தேந்திர கோத்தாரி என பெயர்களை உடைய இரண்டு நபர்களே இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சாளர் ஒருவரினை மும்பையில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து  போட்டி நிர்ணயத்தில் ஈடுபட வைப்பதற்கு பணம் வழங்கி முயற்சி செய்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் இந்திய – இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இடம்பெற்றுள்ளதுடன், இந்த சம்பவத்தின் போது இந்த இரண்டு நபர்களும் போட்டி நிர்ணயம் செய்ய முயற்சித்த வீராங்கனை இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சிகளை மேற்கொண்ட வண்ணம் காணப்பட்டிருக்கின்றார். 

ஓய்விலிருந்து மீண்டும் வந்த அம்பதி ராயுடுவிற்கு தலைவர் பதவி

உலகக் கிண்ண அணியில் தேர்வு செய்யப்படாததை அடுத்து விரக்தியில்…

இதில் கோத்தாரி என்னும் நபர் தன்னை டெல்லியினை சேர்ந்த விளையாட்டு முகாமையாளராக அறிமுகம் செய்திருந்ததோடு, கடந்த ஆண்டு சமூக வலைதளமான இன்ஸ்டாக்ரம் மூலம் போட்டி நிர்ணயம் செய்ய முயற்சித்த வீராங்கனையினை தொடர்பு கொண்டு அவருக்காக முகாமைத்துவ உதவிகளை வழங்குவதாக தெரிவித்திருக்கின்றார். எனினும், குறித்த வீராங்கனை அப்போதே இந்த நபரின் உதவிகளுக்காக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்திருந்தார்.

இவ்வாறாக தன்னை ஒரு முகாமையாளர் என அறிமுகம் செய்த கோத்தாரி, இந்த ஆண்டு ஆரம்பத்தில் ராகேஷ் பப்னா சிறந்த வியாபார ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வருகின்றார் எனக் கூறியே ஆட்ட நிர்ணய முயற்சிகளில் ஈடுபட முயற்சி செய்திருக்கின்றார். எனினும், இவ்வாறாக ஆட்டநிர்ணயத்திற்கு இரண்டு நபர்கள் தன்னை அணுகிய விடயத்தினை குறித்த வீராங்கனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் உடனடியாக தெரிவித்ததனை அடுத்து ஆட்ட நிர்ணய முயற்சி தடுக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரியான அஜித் சிங், இந்த விடயம் தொடர்பிலான ஐ.சி.சி. இன் அறிக்கையினை எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்திருப்பதோடு கோத்தாரி என்னும் நபர் பல மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளிடம் தன்னை முகாமையாளர் என அறிமுகம் செய்த போதிலும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட முயற்சித்த முதல் சந்தர்ப்பம் இது எனக் குறிப்பிட்டிருந்தார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<