சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய கமிந்து மெண்டிஸ்

137

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரான கமிந்து மெண்டிஸின் அபார பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என்பவற்றால் NCC கழகத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சிலபாம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இதன் மூலம், காலிறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை அந்த அணி பெற்றுக் கொண்டது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற முதல்தர கழகங்களுக்கு இடையிலான அழைப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (23) மூன்று போட்டிகள் நடைபெற்றன.

NCC கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு NCC கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய NCC கழகம் 44.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களை எடுத்தது.

மன்சூர் அம்ஜத்தின் அபார சதத்தால் காலி அணிக்கு முதல் வெற்றி

பாகிஸ்தானைச் சேர்ந்த 32 வயதுடைய வலதுகை ஆரம்ப….

NCC கழகம் சார்பாக துடுப்பாட்டத்தில் சதுரங்க டி சில்வா 40 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, சிலாபம் மேரியன்ஸ் கழகம் சார்பாக பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கான 174 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிலாபம் மேரியன்ஸ் கழகம் ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினாலும், ருமேஷ் புத்திக அரைச் சதம் கடந்து பெற்றுக்கொண்ட 53 ஓட்டங்கள் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்ட 31 ஓட்டங்கள் என்பவற்றுடன் 177 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

Photos: NCC vs Chilaw Marians CC | SLC Invitation Limited Over Tournament 2019/20

இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள 3 ஆவது காலிறுதிப் போட்டியில் பாணந்துறை விளையாட்டுக் கழகத்துடன் சிலாபம் மேரியன்ஸ் கழகம் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் – 173 (44.5) – சதுரங்க டி சில்வா 40, பெதும் நிஸ்ஸங்க 36, மஹேல உடவத்த 30, சஹன் ஆரச்சிகே 20, கமிந்து மெண்டிஸ் 5/33, அருண் மெலயில் 2/34

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 177/5 (40.4) – ருமேஷ் புத்திக 53, கமிந்து மெண்டிஸ் 31*, லசித் குரூஸ்புள்ளே 28, ஷெஹான் ஜயசூரிய 25, புலின தரங்க 22*

முடிவு – சிலபாம் மேரியன்ஸ் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி


கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

நஷீம் ஷாவின் அபார பந்துவீச்சுடன் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி….

இந்நிலையில், போட்டியின் 2 ஆவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கிட காலி அணிக்கு 22 ஓவர்களுக்கு 50 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. 

எனினும் அந்த அணி குறித்த ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 83 ஓட்டங்களை எடுத்து வெற்றி வெற்றியீட்டியது. 

போட்டியின் சுருக்கம்

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 147 (45.1) – க்றிஷேன் அபோன்சு 47, அகீல் இன்ஹாம் 20, சாரங்க ராஜகுரு 2/12, கவிக டில்ஷான் 2/25, ஆபித் ஹசன் 2/29

காலி கிரிக்கெட் கழகம் – 83/2 (22) – மன்சூர் அம்ஜத் 51*

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் டக்வத் லூவிஸ் முறைப்படி 34 ஓட்டங்களால் வெற்றி


இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

பொலிஸ் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய துறைமுக அதிகார சபை கழகம் 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களை எடுத்தது.

Photos: SL Ports Authority CC vs Police SC | SLC Invitation Limited Over Tournament 2019/20

பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய பொலிஸ் விளையாட்டுக் கழகம் 44.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் – 161 (49.3) – சுபுன் காவிந்த 54, மிதில அரவிந்த 27, அமோத விதானபத்திரன 21, ப்ரஷான் விக்ரமசிங்க 20, அசேல சிகேரா 4/18, சுபுன் மதுஷங்க 3/27, மொஹமட் பாஹிம் 2/47

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 162/6 (44.2) – வி.ஏ இந்துல்கர் 30, அசேல் சிகேரா 27, லக்ஷான் ரொட்ரிகோ 21, சானக்க கோமசாரு 2/23

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி

காலிறுதிப் போட்டிகளுக்கான அட்டவணை

டிசம்பர் 28 போட்டி இடம்
காலிறுதி 1 A1 – SSC D2 – தமிழ் யூனியன் வி.க NCC
காலிறுதி 2 B1 – NCC C2 – சரசென்ஸ் வி.க கோல்ட்ஸ்
காலிறுதி 3 C1 – பாணதுறை வி.க B2 – சிலாபம் மேரியன்ஸ் SSC
காலிறுதி 4 D1 – விமானப்படை வி,க A2 – இராணுவப்படை வி.க MCG Katunayake

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<