T20 உலகக்கிண்ணத்தின் தூதுவராகும் உசைன் போல்ட்

ICC Men’s T20 World Cup 2024

37

உலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரரான ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் T20 உலகக்கிண்ணத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. 

எட்டு தடவைகள் ஒலிம்பிக் தங்கம் வென்றுள்ள உசைன் போல்ட் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 அஞ்சலோட்டம் என  மெய்வல்லுனர் போட்டிகளில் உலக சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். 

>> T20 உலகக்கிண்ணத்துக்கான முதற்கட்ட இலங்கை குழாத்தில் வியாஸ்காந்த்!

இவர் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ஆடவருக்கான T20 உலகக்கிண்ணத் தொடரின் தூதுவராக செயற்படவுள்ளார். 

அதன் முதற்கட்டமாக அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார். அதுமாத்திரமின்றி போட்டிகளில் இணைந்துக்கொள்ளும் இவர் அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி நிரல்களிலும் பங்கேற்கவுள்ளார். 

T20 உலகக்கிண்ணத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட உசைன் போல்ட், ஐசிசி T20 உலகக்கிண்ணத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உற்சாகமடைகிறேன். மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது. கிரிக்கெட் எப்போதும் எனது மனதில் விஷேடமான இடத்தில் இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் போட்டிகளில் இணைந்துக்கொண்டு கிரிக்கெட்டை சர்வதேச அளவில் வளர்ச்சிக்கு கொண்டு செல்வதற்கு எண்ணுகிறேன்என்றார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<