தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடர் அணிக்குழாம்கள் வெளியீடு

344

தேசிய சுபர் லீக் (NSL) ஒருநாள் தொடரின் 2024ஆம் ஆண்டின் பருவத்திற்குரிய போட்டிகள் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகுகின்றன.

தேசிய சுபர் லீக் தொடரில் இம்முறையும் கொழும்பு, காலி, கண்டி, தம்புள்ளை, மற்றும் யாழ்ப்பாணம் என ஐந்து அணிகள் பங்கெடுப்பதோடு இந்த தேசிய சுபர் லீக் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>ஐசிசி வீரர்கள் தரவரிசையில் பெதும், ஹஸரங்கவுக்கு முன்னேற்றம்!

தொடரின் முதல் சுற்றில் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் தங்களுக்கிடையே ஒரு தடவை மோதிக்கொள்ளவிருப்பதோடு, தொடரின் இறுதிப் போட்டிக்கு புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தெரிவாகும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக செயற்படும் குசல் மெண்டிஸ் இந்த தொடரில் கொழும்பு அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு, சதீர சமரவிக்ரம யாழ்ப்பாண அணியின் தலைவர் பொறுப்பினை ஏற்றிருக்கின்றார்.

பெதும் நிஸ்ஸங்க கண்டி அணியின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளதோடு, காலி அணிக்கு ரமேஷ் மெண்டிஸ் தலைவராகவும் வனிந்து ஹஸரங்க தம்புள்ளை அணியின் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

தேசிய சுபர் லீக் தொடரின் அணிக்குழாம்களில் தமிழ் பேசும் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இளம் சுழல்பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் யாழ்ப்பாண அணியில் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் சிராஸ் மற்றும் மர்பின் அபினாஷ் ஆகியோர் தம்புள்ளை அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் அட்டவணை

திகதி  அணி 1  அணி 2  மைதானம் 
23 பெப்ரவரி காலி கண்டி பல்லேகல
யாழ்ப்பாணம் கொழும்பு தம்புள்ளை
26 பெப்ரவரி கொழும்பு தம்புள்ளை பல்லேகல
கண்டி யாழ்ப்பாணம் தம்புள்ளை
29 பெப்ரவரி தம்புள்ளை காலி பல்லேகல
கொழும்பு கண்டி தம்புள்ளை
3 மார்ச் யாழ்ப்பாணம் காலி கொழும்பு
கண்டி தம்புள்ளை ஹம்பாந்தோட்டை
6 மார்ச் காலி கொழும்பு கொழும்பு
தம்புள்ளை யாழ்ப்பாணம் ஹம்பாந்தோட்டை
9 மார்ச் இறுதிப் போட்டி கொழும்பு

 

அணிக்குழாம்கள்

Team Colombo – Kusal Mendis (C/WK), Charith Asalanka (VC), Shevon Daniel, Danushka Gunathilake, Avishka Fernando, Nipun Dhananjaya, Krishan Sanjula (WK), Kusal Janith Perera, Ashen Bandara, Nuwanidu Fernando, Vishad Randika (WK), Chamindu Wijesinghe, Dushan Vimukthi, Dasun Shanaka, Nisala Tharaka, Isitha Wijesundara, Kasun Rajitha, Nishan Peiris, Prabath Jayasuriya, Tharindu Rathnayake

Reserves – Himasha Liyanage, Pramod Maduwantha, Sachitha Jayathilake, Charindu Fernando, Dileepa Jayalath


Team Jaffna – Sadeera Samarawickrama (C/WK), Nishan Madushka (VC), Navod Paranavithana, Hasitha Boyagoda, Nipun Karunanayake, Sithara Hapuhinna (WK), Avishka Tharindu, Janith Liyanage, Vijayakanth Viyaskanth, Ravindu Fernando, Santhush Gunathilake, Chamath Gomez, Lahiru Madushanka, Shehan Fernando, Binura Fernando, Pramod Madushan, Dilum Sudeera, Sahan Nanayakkara, Jeffrey Vandersay

Reserves – Manelker de Silva, Adeesha Thilanchana, Eshan Malinga, Nipun Malinga, Saminda Fernando (WK)


Team Kandy – Pathum Nissanka (C), Sahan Arachchige (VC), Lahiru Udara, Kasun Adikari, Niroshan Dickwella (WK), Ahan Wickramasinghe, Kamil Mishara (WK), Ravindu Rathnayake, Movin Subasinghe, Chamod Sandaru, Chamika Karunaratne, Pulina Tharanga, Mithun Jayawickrama, Dushmantha Chameera, Lahiru Kumara, Matheesha Pathirana, Nipun Premarathne, Chamika Gunasekara, Ashian Daniel, Wanuja Sahan

Reserves – Thanuka Dabare, Thikshila de Silva, Nimsara Atharagalle, Sithum Dissanayake, Lasith Embuldeniiya


Team Galle – Ramesh Mendis (C), Dunith Wellalage (VC), Oshada Fernando, Sohan de Livera (WK), Irosh Samarasooriya, Raminda Wijesuriya, Pasindu Sooriyabandara, Angelo Mathews, Dinesh Chandimal (WK), Shalith Fernando (WK), Lahiru Samarakoon, Kavishka Anjula, Dhananjaya Lakshan, Nimesh Vimukthi, Dilshan Madushanka, Milan Rathnayake, Udith Madushan, Akila Dananjaya, Praveen Jayawickrama, Maheesh Theekshana

Reserves – Shehan Fernando (WK), Lakshan Edirisinghe, Jehan Daniel, Mudith Lakshan, Asanka Manoj


Team Dambulla – Wanindu Hasaranga (C), Dhananjaya de Silva (VC), Kamindu Mendis, Minod Bhanuka (WK), Bhanuka Rajapaksa, Lasith Croospulle, Leo Fransisco, Pavan Rathnayake, Sonal Dinusha, Dushan Hemantha, Ayana Siriwardene, Ranitha Liyanaarachchi, Ranesh Silva (WK), Mohammed Shiraz, Nuwan Thushara, Asitha Fernando, Chamindu Wijesinghe, Vishwa Fernando, Murvin Abinash, Lakshan Sandakan

Reserves – Sanoj Darshika, Chalana de Silva, Dilshan Abeysinghe, Naveen Fernando, Lakshan Gamage

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<