மாலிங்க பாணியில் பந்துவீசும் நுவன் துஷார இலங்கை வளர்ந்து வரும் அணியில்

3355

இலங்கை மற்றும் பங்களாதேஷ்  வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான இந்த தொடருக்கான இலங்கை வளர்ந்து வரும் அணி எதிர்வரும் 16 ஆம் திகதி பங்களாதேஷிற்கு பயணிக்கவுள்ளதுடன், 19 ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.

மழை காரணமாக கைவிடப்பட்ட பயிற்சிப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம்

இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் மற்றும் நியூசிலாந்து…..

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் 21 வயதான சச்சிந்து கொலம்பகே, ஷிரான் பெர்னாண்டோ மற்றும் லசித் மாலிங்கவின் பாணியில் உள்ளூர் போட்டிகளில் பந்துவீசிவந்த நுவன் துஷார ஆகியோர் இளையோர் குழாத்துக்குள் முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஜெஹான் டேனியல் மற்றும் ஹசித போயகொட ஆகியோர் ஒருநாள் குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளதுடன், ஜெஹான் டேனியல் டெஸ்ட் குழாத்திலும் இடம்பெற்றுள்ளார்.

இவர்களுடன், தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றிருந்த அமில அபோன்சோ இம்முறை டெஸ்ட் குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளதுடன், லசித் எம்புல்தெனிய இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால், இந்த தொடரில் உள்வாங்கப்படவில்லை.

இலங்கை வளர்ந்து வரும் அணியின் தலைவராக தொடர்ந்தும் சரித் அசலங்க செயற்படவுள்ளதுடன், தென்னாபிரிக்க தொடரில் பங்கேற்றிருந்த மொஹமட் சிராஸ் டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றுள்ளார். அதேநேரம், தென்னாபிரிக்காவில் பிரகாசித்திருந்த பெதும் நிஸ்ஸங்க, மினோத் பானுக, ரொமேஷ் மெண்டிஸ் மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் குழாம்களில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தென்னாபிரிக்காவில் நடைபெற்ற தொடரில் இணைக்கப்பட்டிருந்த இளம் வீரர் டில்ஷான் மதுசங்க மற்றும் லஹிரு மதுசங்க ஆகியோர் இந்த குழாம்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், சாமிக்க கருணாரத்ன டெஸ்ட் குழாத்திலும், கமிந்து மெண்டிஸ் ஒருநாள் குழாத்திலும் மாத்திரம் இடம்பிடித்துள்ளனர்.

டெஸ்ட் குழாம்

சரித் அசலங்க (தலைவர்), சங்கீத் குரே, லஹிரு உதார, பெதும் நிஸ்ஸங்க, பிரமோத் மதுவந்த, மினோத் பானுக, அஷேன் பண்டார, ஜெஹான் டேனியல், ரொமேஷ் மெண்டிஸ், அமில அபோன்சோ, நிசான் பீரிஸ், சாமிக்க கருணாரத்ன, அசித பெர்னாண்டோ, மொஹமட் சிராஸ், கலன பெரேரா,

ஒருநாள் குழாம்

சரித் அசலங்க (தலைவர்), சந்துன் வீரகொடி, ஹசித போயகொட, பெதும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், அஷேன் பண்டார, மினோத் பானுக, சம்மு அஷான், ரொமேஷ் மெண்டிஸ், அமில அபோன்சோ, சச்சிந்து கொலம்பகே, ஜெஹான் டேனியல், ஷிரான் பெர்னாண்டோ, நுவன் துஷார, கலன பெரேரா

இந்த குழாம்களானது இலங்கை கிரிக்கெட் சபையினால் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<