ஒருநாள் தொடரை வைட்வொஷ் செய்து வென்ற தென்னாபிரிக்கா

645

கேப்டவுனில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி 5-0 என வைட்வொஷ் முறையில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணி நிர்ணயித்திருந்த 226 என்ற வெற்றியிலக்கை நோக்கிய தென்னாபிரிக்க அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன்போது மைதான விளக்குகளில் (floodlight) ஏற்பட்ட கோளாறு காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, தென்னாபிரிக்க அணிக்கு டக்வர்த் லூவிஸ் முறைப்படி வெற்றி வழங்கப்பட்டது.

ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறார் ஜேபி டுமினி

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின்…

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. கடந்த போட்டிகளை போன்று இந்தப் போட்டியிலும் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளித்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய உபுல் தரங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

முதல் இரண்டு விக்கெட்டுகளும் 14 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில், ஜோடி சேர்ந்த ஓசத பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பிய போதிலும், இம்ரான் தாஹிர் பந்து வீச அழைக்கப்பட்ட முதல் ஓவரிலேயே ஓசத பெர்னாண்டோ 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி

அவிஷ்க பெர்னாண்டோ, உபுல் தரங்க, ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ப்ரியமல் பெரேரா, தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, அஞ்செலோ பெரேரா, இசுரு உதான, அகில தனன்ஜய, லசித் மாலிங்க

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து குசல் மெண்டிஸ் அரைச்சதம் கடக்க, இந்த தொடரில் முதன் முறையாக அணிக்குள் இணைக்கப்பட்ட அஞ்லோ பெரேரா சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். இருவரும் 62 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற 31 ஓட்டங்களை பெற்றிருந்த அஞ்செலோ பெரேரா, இம்ரான் தாஹிரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரன்-அவுட் மூலமாக குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த திசர பெரேரா மற்றும் தனன்ஜய டி சில்வா அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

Photos: Sri Lanka vs South Africa – 5th ODI

எனினும், நான்காவது ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய ப்ரியமல் பெரேரா நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த, இசுரு உதான அவருடன் இணைந்து வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இருவரும் இணைந்து 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில், சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இசுரு உதான 29 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவர் ஆட்டமிழந்த அடுத்த பந்தில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய ப்ரியமல் பெரேரா 57 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வருகைத்தந்த அகில தனன்ஜய இறுதி ஓவரில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் காகிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், என்ரிச் நோர்ட்ஜே மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை T20I குழாம் அறிவிப்பு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான…

பின்னர், 226 என்ற வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. கடந்த நான்கு போட்டிகளிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குயிண்டன் டி கொக் மாலிங்கவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த பாப் டு ப்ளெசிஸ் மற்றும் எய்டன் மர்க்ரம் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்து நம்பிக்கை அளித்தனர்.

தென்னாபிரிக்க அணி

குயிண்டன் டி கொக், எய்டன் மர்க்ரம், பாப் டு ப்ளெசிஸ், ரஸி வென் டெர் டெஸன், ஜேபி டுமினி, எண்டில் பெஹலுக்வாயோ, லுங்கி ன்கிடி, என்ரிச் நொர்ட்ஜே, ககிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், டுவைன் ப்ரிட்டோரியர்ஸ்

எனினும், சற்று நெருக்கடியான விதத்தில் இலங்கை அணி பந்து வீச தென்னாபிரிக்க அணி தங்களுடைய 2வது விக்கெட்டை 78 ஓட்டங்களுக்கு இழந்தது. டு ப்ளெசிஸ் 24 ஓட்டங்களை பெற்றிருந்த போது, திசர பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரது ஆட்டமிழப்பினை தொடர்ந்து தென்னாபிரிக்க அணி வேகமாக ஓட்டங்களை பெற தொடங்கியது. எய்டன் மர்க்ரம் அரைச்சதம் கடக்க, ரஸ்ஸி வென் டெர் டஸன் சிறப்பாக ஓட்டங்களை குவித்தார்.  

இவர்கள் இருவரும் நேர்த்தியாக துடுப்பெடுத்தாடிய நிலையில், தென்னாபிரிக்க அணி 28 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன் போது துரதிஷ்டவசமாக மைதான விளக்குகளில் (floodlight) ஏற்பட்ட கோளாறு காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டது. தொடர்ந்தும், மைதான விளக்குகளை திருத்தியமைக்க முடியாத காரணத்தினால், டக்வர்த் லூவிஸ் முறைப்படி தென்னாபிரிக்க அணிக்கு 41 ஓட்டங்களால் வெற்றி வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருடன் இலங்கை வரவுள்ள ஹத்துருசிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின்…

தென்னாபிரிக்க அணி சார்பில் எய்டன் மர்க்ரம் ஆட்டமிழக்காமல் 75 பந்துகளில் 67 ஓட்டங்களையும், வென் டெர் டஸன் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்படி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 5-0 என வைட்வொஷ் முறையில் கைப்பற்றியது.

ஸ்கோர் விபரம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<