இலங்கைக்காக ஜொலித்த சானக்க; இரண்டாம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கீடு

714

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளும் மழை காரணமாக குறைவான ஓவர்கள் வீசப்பட்டிருக்கும் நிலையில் கைவிடப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று சீரற்ற காலநிலை காரணமாக மதிய போசன இடைவேளையினை அடுத்தே இப்போட்டி தொடங்கியிருந்தது.

லக்மாலின் அபாரத்தினால் மழைநாள் டெஸ்ட்டில் இலங்கை சிறந்த துவக்கம்

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய…

தொடர்ந்து இலங்கை அணியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த இந்திய அணியினர் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் கைவிடப்படும் போது 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான ஆரம்பத்தினை காட்டியிருந்தனர். முதல் நாளில் 11 ஓவர்களே முழுமையாக வீசப்பட்டிருந்தன.

களத்தில் செட்டெஸ்வர் புஜாரா 8 ஓட்டங்களுடனும், அஜிங்கியா ரஹானே ஓட்டமேதும் எடுக்கமாலும் நின்றிருந்தனர்.

இதையடுத்து, அதிக ஓவர்கள் (98) வீச வேண்டி இருந்ததால் போட்டி ஆரம்பமாகும் வழமையான நேரத்துக்கு சற்று முன்னர் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  

நேற்று ஆறு ஓட்டமற்ற ஓவர்களை வீசி மூன்று விக்கெட்டுக்களைப் பதம்பார்த்திருந்த சுரங்க லக்மால் 2001ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தப்பட்ட அதி சிறந்த பந்துவீச்சினை  இன்றைய நாளில் பதிவு செய்திருந்தார். 7 ஓட்டமற்ற ஓவர்களினை வீசிய லக்மாலின் 47 ஆவது பந்திலேயே முதல் ஓட்டம் இந்திய அணியினரால் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியாவின் முதல் விக்கெட்டினை தசுன் சானக்க விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல பிடியெடுக்க கைப்பற்றியிருந்தார். இதனால் அஜிங்கியா ரஹானே ஆட்டமிழந்து வெறும் 4 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறிந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மைதானம் விரைந்த ரவிச்சந்திரன் அஷ்வினின் விக்கெட்டினையும் அவர் வந்த கதியில் லஹிரு திரிமான்ன  எடுத்த அழகிய பிடியெடுப்பு மூலம் மீண்டும் தசுன் சானக்க கைப்பற்றியிருந்தார். ரஹானே போன்று 4 ஓட்டங்களுடன் அஷ்வினும் ஓய்வறை நடந்தார்.

முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் முக்கியமான அனைவரினையும் பறிகொடுத்த இந்திய அணி 50 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியிருந்தது. எனினும், மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக மைதானம் வந்த செட்டெஸ்வர் புஜாரா இந்திய அணிக்கு மெதுவான முறையில் ஓட்டங்களை சேர்த்து வலுவளிக்கும் முயற்சி ஒன்றினை ஆரம்பிக்க தொடங்கியிருந்தார்.

ஹத்துருசிங்கவை அன்புடன் வரவேற்கிறோம் : அமைச்சர் தயாசிறி

இப்படியான ஒரு தருணத்தில் போட்டியின் மதிய போசன இடைவேளை நெருங்கும் போது போட்டியில் மழை குறுக்கிட ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

மழை விட்டாலும் ஆடுகளம் வெகுவாக நனைந்திருந்தமையினால் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக நடுவர்கள் பின்னர் அறிவித்திருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இந்திய அணி தமது முதல் இன்னிங்சுக்காக 32.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களினைப் பெற்றுள்ளது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் செட்டெஸ்வர் புஜாரா 47 ஓட்டங்களுடனும், ரித்திமன் சஹா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

இன்றைய நாளில் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி சகலதுறை வீரரான தசுன் சானக்க இலங்கை டெஸ்ட் அணியில் தனது மீள்வருகையினால் தனது தரப்பு அடைந்த பெறுமதியினை உணர்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 74/5 (32.5) செட்டெஸ்வர் புஜாரா 47(102)*, சுரங்க லக்மால் 5/3(11), தசுன் சானக்க 23/2(8)

போட்டியின் மூன்றாம்  நாள் ஆட்டம் நாளை தொடரும்