சௌரவ் கங்குலிக்கு கொவிட்-19 தொற்று

India Cricket

103
ICC

இந்திய கிரிக்கெட் சபையின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சௌரவ் கங்குலிக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) சுகயீனம் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் உடனடியாக சிகிச்சைகளை மேற்கொண்டதுடன், கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதுடன், உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகளை பெற்று வருகின்றார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் சௌரவ் கங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி, கடந்த ஜனவரி மாதத்தில் மார்பு அசௌகரியம் காரணமாக வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறியதுடன், சத்திரசிகிச்சையொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

அதேநேரம், மீண்டும் ஒருமுறை மாரடைப்புக்கான சத்திரசிகிச்சையொன்று, குறித்த மாதத்தின் பிற்பகுதியில் சௌரவ் கங்குலிக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<