சீரற்ற காலநிலையால் சமனிலையான மேஜர் எமர்ஜிங் போட்டிகள்

58

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் இரண்டு நாட்கள் கொண்ட “மேஜர் எமர்ஜிங் லீக் (Emerging Major League)” தொடரில் இன்று (15) இரண்டு போட்டிகள் முடிவுக்கு வந்தன.

தனஞ்சய, ஷெஹான், கமிந்துவின் அபார ஆட்டத்துடன் ஆரம்பமாகிய MCA ப்ரீமியர் லீக்

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் 27…………..

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – களுத்துறை நகர கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் பாணந்துறை விளையாட்டு கிழகம் – ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி என்பன இன்றைய தினம் நிறைவுக்கு வந்தன.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – களுத்துறை நகர கழகம்

கட்டுநாயக்க மேரியன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிலாபம் மேரியன்ஸ் அணி 327 ஓட்டங்களை பெற, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய களுத்துறை நகர கழகம் 161 ஓட்டங்களுக்கு 9 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மழை குறுகிட்டது. பின்னர், மழை காரணமாக போட்டி சமனிலையுடன் முடிவுக்கு வந்தது.

இந்தப் போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணியின் லசித் க்ரூஸ்புள்ளே சதம் கடக்க, டேசான் சஞ்சீவ 79 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்துவீச்சில் இசுரு பிரதீப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். களுத்துறை அணியில் சிந்தக்க ஸ்ரீவர்தன 40 ஓட்டங்களையும், பந்துவீச்சில் நிம்சார அதரகல்ல 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 327/10 (71.3) லசித் க்ரூஸ்புள்ளே 117, டேசான் சஞ்சீவ 79, இமேஸ் விமுக்தி 46, இசுரு பிரதீப் 5/65, திலங்க ரவிசான் 2/53

களுத்துறை நகர கழகம் – 161/9 (64.2), சிந்தக்க ஸ்ரீவர்தன 40, நிம்சார அதரகல்ல 5/36, நிமேஸ் விமுக்தி இமேஸ் விமுக்தி 2/39

முடிவு – போட்டி சமனிலை


பாணந்துறை விளையாட்டு கிழகம் – ப்ளூம்பீல்ட் கழகம்

நேற்று ஆரம்பமான இந்தப் போட்டி மழைக்காரணமாக குறைந்த நேரம் மாத்திரமே நடைபெற்றது. எனினும், இன்றைய தினம் ஆரம்பித்தப் போட்டியில் பாணந்துறை விளையாட்டு கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க, பின்னர் களமிறங்கிய ப்ளூம்பீல்ட் அணி 28/1 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டம் மழை காரணமாக நிறத்தப்பட்டது.  தொடர்ந்தும் மழை குறுப்பிட்டதால், போட்டி சமனிலையுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.

பாணந்துறை அணிசார்பில் விஷ்வ சத்துரங்க  அதிகபட்சமாக 87 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் திலீப ஜயலத் 4/16 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாணந்துறை விளையாட்டு கிழகம் – 157 (40.5), விஷ்வ சத்துரங்க  87, திலீப ஜயலத் 4/16

ப்ளூம்பீல்ட் கழகம் – 28/1 (7)

முடிவு – போட்டி சமனிலை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<