உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்து வரும் லசித் மாலிங்க

1922

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 2017/18 ஆம் ஆண்டின் உள்ளூர் பருவத்திற்கான T20 தொடரின் 11 போட்டிகள் இன்று (25) நாடெங்கும் நடைபெற்றன.

இதில் சீரற்ற காலநிலையால் சில முக்கிய போட்டிகள் தடைப்பட்டதோடு, கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC), கோல்ட்ஸ், ராகம, NCC, தமிழ் யூனியன் மற்றும் சோனகர் அணிகள் தமது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தன. SSC கழகம் தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்ததோடு சிலாபம் மேரியன்ஸ் அணியின் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இலங்கை உள்ளூர் T20 போட்டிகள் ஆரம்பம்

குறிப்பாக இலங்கை அணியில் இடம் கிடைக்காத நிலையில் உள்ளூர் T20 போட்டிகளில் களமிறங்கியிருக்கும் லசித் மாலிங்க தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

NCC அணிக்காக விளையாடும் அவர் கொழும்பு ப்ளூம்பீல்ட் மைதானத்தில், பொலிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் NCC அணிக்காக நிரோஷன் திக்வெல்ல 37 பந்துகளில் 60 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 28 பந்துகளில் 44 ஓட்டங்களையும் விளாச அந்த அணி 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

லசித் மாலிங்க கடந்த சனிக்கிழமை (24) நடந்த முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குசல் மெண்டிஸ் 36 பந்துகளில் 71 ஓட்டங்களை விளாச கொழும்பு கிரிக்கெட் கழகம் கோல்ட்ஸ் மைதானத்தில் நடந்த ப்ளூம்பீல்ட் அணிக்கு எதிரான போட்டியில் 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

முதல் போட்டியில் பலம் மிக்க SSC அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த சோனகர் விளையாட்டுக் கழகம் இன்றைய போட்டியில் குருநாகல் யூத் கிரிக்கெட் கழகத்தை 3 விக்கெட்டுகளால் போராடி வென்றது.

 

போட்டிகளின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 200 (20) – குசல் மெண்டிஸ் 71, டில்ஷான் முனவீர 43, சச்சித் பதிரண 35, லசித் அபேரத்ன 25, கசுன் ராஜித 2/34, இம்ரான் கான் 4/35

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 177/9 (20) – அதீஷ நாணயக்கார 48, ரமேஷ் மெண்டிஸ் 45, பிரமுத் ஹெட்டிவத்த 31, லக்ஷான் சந்தகன் 4/18, லஹிரு மதுஷங்க 2/33, லஹிரு கமகே 2/27

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 23 ஓட்டங்களால் வெற்றி


கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 197/5 (20) – சஹான் ஆரச்சிகே 66*, டில்ருவன் பெரேரா 62, ராஜித் பிரியான் 2/38

காலி கிரிக்கெட் கழகம் – 60 (12.4) – சானக்க விஜேசிங்க 18, பிரபாத் ஜயசூரிய 4/08, கவீஷ்க அஞ்சுல 3/22

முடிவு – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 137 ஓட்டங்களால் வெற்றி  


குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் – 127 (19.4) – சரித் மெண்டிஸ் 26, மலித் குரே 24, நிலங்க சந்தகன் 2/19, சஹான் அதீஷ 2/27, கோசல குலசேகர 2/19

சோனகர் விளையாட்டுக் கழகம் – 128/7 (18.3) – திலக்ஷ சுமனசிரி 36, இரோஷ் சமரசூரிய 21, சாமர சில்வா 21, கல்ஹான் சினத் 3/25, ஹஷான் பிரபாத் 2/22

முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் 3 விக்கெட்டுகளால் வெற்றி

சமிந்த வாஸிடமிருந்து இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை


NCC எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

NCC – 206/6 (20) – நிரோஷன் திக்வல்ல 60, தினேஷ் சந்திமால் 44, உபுல் தரங்க 28, பானுக்க ரஜபக்ஷ 24, புத்திக சஞ்சீவ 2/45

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 167/7 (20) – மஹேஷ் பிரியதர்ஷன 61, சமித் துஷந்த 50, லசித் மாலிங்க 3/31, சதுரங்க டி சில்வா 2/38

முடிவு – NCC அணி 39 ஓட்டங்களால் வெற்றி


களுத்துறை நகர கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர கழகம் – 54 (19.4) – பசிந்து மதுஷான் 13, லக்ஷான் ஜயசிங்க 13*, நிஷான் பீரிஸ் 4/03, அமில அபொன்சோ 2/06, குஷான் வீரக்கொடி 2/09

ராகம கிரிக்கெட் கழகம் – 58/3 (10.1) – ஷெஹான் பெர்னாண்டோ 22, லஹிரு மிலந்த 18, லக்ஷான் ஜயசிங்க 1/06

முடிவு – ராகம கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுகளால் வெற்றி


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 143 (19.5) – டிலசிறி லொகுபண்டார 30, லசித் க்ரூபுள்ளே 34, சச்சின் டல்பெதடோ 23, அண்டி சொலமன்ஸ் 3/23, சதுர ரன்துனுவ 3/21

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 148/2 (18.2) – அண்டி சொலமன்ஸ் 60, ருவிந்து குணசேகர 54*  

முடிவு – செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 129 (19.5) – சச்சிக்க உதார 26, சொஹான் ரங்கிக்க 23, பிரமோத் மதுஷான் 4/27, பினிர பெர்னாண்டோ 2/17

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் – 133/8 (20) – பினுர பெர்னாண்டோ 36, ஜீவன் மெண்டிஸ் 27*, மிலான் ரத்னாயக்க 3/24

முடிவு – தமிழ் யூனியன் கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றி

முக்கியமான பலர் இன்றி இலங்கை வரும் இந்திய குழாம் அறிவிப்பு


இலங்கை இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

இலங்கை இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 211/8 (20) – கசுன் டி சில்வா 70, ஹிமாஷ லியனகே 51, சீகுகே பிரசன்ன 31, வினோத் பெரேரா 4/37

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 94/5 (13) – வினோத் பெரேரா 47*, துஷான் விமுக்தி 2/14

முடிவு – இலங்கை இராணுவப்படை கிரிக்கெட் கழகம் 43 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)


இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 172/9 (20) – ஹஷான் விமர்ஷன 29, கயான் மனீஷன் 31*, யஷோத லங்கா 22, நவீன் கவிகார 3/34, சானக்க ருவன்சிறி 2/39, ரஜீவ வீரசிங்க 2/25

லங்கன் கிரிக்கெட் கழகம் – 16/1 (2)

முடிவு – முடிவு இல்லை (சீரற்ற காலநிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டது)


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் BRC

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 144 (19.5) – ருக்ஷான் ஷெஹான் 25, தசுன் செனவிரத்ன 25, சச்சித்ர சேரசிங்க 21, சாமிக்க எதிரிசிங்க 4/16, திலகரத்ன சம்பத் 4/19

முடிவு – முடிவு இல்லை (சீரற்ற காலநிலை காரணமாக போட்டி கைவிடப்பட்டது)


பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் SSC

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 111 (19.1) – சஞ்சய சதுரங்க 27, நதீர நாவல 25, ஆகாஷ் சேனாரத்ன 3/11, ஜெப்ரி வெண்டர்சே 2/31

SSC – 71/7 (13) – திமுத் கருணாரத்ன 21, டிலேஷ் குணரத்ன 2/12, அலங்கார அசங்க சில்வா 2/25

முடிவு – பதுரெலிய கிரிக்கெட் கழகம் 10 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)