இலங்கை கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைப்பு

988
SLC Premier League Tournament

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இந்த வாரம் ஆரம்பிக்க இருந்த 2016/17ஆம் பருவகால இலங்கை கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டிகளை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக போட்டிகளை நடத்துவதில் சிக்கல்கள் காணப்படுவதனாலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

24 அணிகளை உள்ளடக்கிய முதல் தர கிரிக்கெட் தொடரான குறித்த பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இந்த பருவகால ஆரம்பமாக, நவம்பர் 25ஆம் திகதி (நாளை) தேசிய ரீதியில் மொத்தமாக 1 போட்டிகள் நடைபெறவிருந்தன

இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிமியர் லீக் போட்டிகள் நவம்பர் 25ஆம் திகதி முதல்

குறிப்பிட்ட இந்த பருவகால போட்டிகள், மூன்று நாட்கள் கொண்ட போட்டிகளாக இடம்பெறுவதுடன்

இந்நிலையில் இந்த போட்டி ஒத்திவைப்பு தொடர்பிலான தகவலை இலங்கை கிரிக்கெட் சபையின் உதவி முகாமையாளரும், போட்டி ஒழுங்கமைப்பாளரும், புள்ளியியல் நிபுணருமான சிந்தக ஜயனத் thepapare.comக்கு உறுதி செய்தார்.

குறிப்பிட்ட அனைத்து அணிகளுக்குமான போட்டிகள் டிசம்பர் மாத முதல் வாரத்தில் நடைபெற இருப்பதோடு அதனை தொடர்ந்து, முன்னரே அட்டவணைப்படுத்தப்பட்ட போட்டிகள் டிசம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து தொடர்ந்து நடைபெறவுள்ளன.

‘’கடும் மழை காரணமாக கடந்த இரு நாட்களாக எங்களால் பயிற்சிகள் எதனையும் மேற்கொள்ள முடியவில்லை. அதே நேரம், மைதான ஊழியர்களுக்கு கிரிக்கெட் ஆடுகளத்தைக்கூட தயார் செய்ய முடியவில்லை. அதனால் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்துக்கு பிற்போடப்பட்டமை நல்லதொரு முடிவே என்று நான் நினைக்கிறேன் என்று இத்தொடரில் பங்குகொள்ளும் அணியொன்றின் தலைவர் தெரிவித்திருந்தார்.

போட்டி அட்டவணை

தொடரில் A மட்டத்தில் உள்ள 14 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். எனவே, ஒரு குழுவில் 7 அணிகள் அடங்கும். குறித்த குழு மட்டப் போட்டிகளில் இரு குழுக்களிலும் முதல் நான்கு இடங்களையும் பெறும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகும். சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் (நான்கு நாள் போட்டிகள்) இளம் சிவப்பு பந்திலேயே விளையாடப்படும்.

சுப்பர் 8 சுற்றுக்கு தெரிவாகாத ஏனைய 6 அணிகளும் பிளேட் சுற்றுப் போட்டியில் மோதும். இந்தப் போட்டி 3 நாட்களைக் கொண்டதாக அமையும். அதேபோன்று, அந்த ஆறு அணிகளும் அடுத்த கருவகாலத்தில் A மட்டத்தில் இருந்து B மட்டத்திற்கு தரமிறக்கப்படும்.  

B மட்டப் போட்டிகள் என்பது அபிவிருத்தி அடைந்து வரும் அணிகளுக்கான மூன்று நாட்களை கொண்ட லீக் போட்டிகளாகும். இப்போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் அணிகள் அடுத்த பருவகாலத்தில் A மட்டத்திற்கு தரமுயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.