கபுகெதர, கருணாரத்ன ஆகியோரின் சதத்தால் SSC அணி வலுவான நிலையில்

336

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான ப்ரீமியர் லீக் A நிலை தொடரின் ஐந்து போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.

SSC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

திமுத் கருணாரத்ன மற்றும் சாமர கபுகெதரவின் சதத்தின் மூலம் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக SSC அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த SSC அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன நிதானமாக ஆடி சதம் (141) பெற்றார். தொடர்ந்து மத்திய வரிசையில் வந்த சாமர கபுகெதர (103*) சதம் ஒன்றை குவிக்க SSC அணி கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளது.

ஷெஹான் ஜயசூரியவின் சதத்தின் உதவியுடன் சிலாபம் மேரியன்ஸ் வலுவான நிலையில்

கொழும்பு கிரிக்கெட் கழகம் தனது முதல் இன்னிங்சுக்காக 314 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் SSC அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது தனது முதல் இன்னிங்சுக்காக 5 விக்கெட்டுகளை இழந்து 395 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 314 (80.5) – அஷான் பிரியஞ்சன் 84, மாதவ வர்ணபுர 79*, கவீன் பண்டார 53, லசித் அபேரத்ன 43, அக்தாப் காதர் 3/45, கசுன் மதுஷங்க 2/33, சச்சித்ர சேனநாயக்க 2/88

SSC (முதல் இன்னிங்ஸ்) – 395/5 (97) – திமுத் கருணாரத்ன 141, சாமர கபுகெதர 103*, மினோத் பானுக்க 67*, கவிந்து குலசேகர 30, வனிந்து ஹசரங்க 2/91, சச்சித் பதிரன 2/93


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

சோனகர் விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்ஸில் அடைந்த பின்னடைவை சமாளித்து அணித் தலைவர் சாமர சில்வாவின் வேகமான சதத்தின் மூலம் ப்ளூம்பீல்ட் கழகத்திற்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் முன்னிலை பெற்றுள்ளது.

கொழும்பு ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சோனகர் விளையாட்டுக் கழகம் தனது முதல் இன்னிங்சில் 163 ஓட்டங்களுக்கு சுருண்டது. இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த ப்ளூம்பீல்ட் அணி 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

முதல் இன்னிங்சில் 50 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சோனகர் விளையாட்டுக் கழகத்திற்கு மத்திய வரிசையில் வந்த சாமர சில்வா 112 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவின் போது சோனகர் விளையாட்டுக் கழகம் 296 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன்படி அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 246 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 163 (43.2) – ஷானுக்க துலாஜ் 39, தரிந்து ரத்னாயக்க 36, பிரிமோஷ் பெரேரா 20, இம்ரான் கான் 2/13, லஹிரு சமரகோன் 4/56, ரமேஷ் மெண்டிஸ் 2/73  

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 213 (68.3) – நிசல் பிரான்சிகோ 61, சச்சின் ஜயவர்தன 49, மலித் டி சில்வா 25, பிரமுத் ஹெட்டிவத்த 22, சஜீவ வீரகோன் 6/58, தரிந்து ரத்னாயக்க 2/93

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 296/6 (65) – சாமர சில்வா 112*, பபசர வதுகே 52, பிரிமோஷ் பெரேரா 28, தெனுவன் ராஜகருணா 25, ஷானுக்க துலாஜ் 23, நிபுன் கருணாநாயக்க 2/44, மலித் டி சில்வா 2/69


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் அணித்தலைவர் மலிந்த புஷ்பகுமாரவின் அபார பந்துவீச்சின் மூலம் முதல் இன்னிங்சுக்காக 160 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணி தனது முதல் இன்னிங்சுக்காக 545 ஓட்டங்களை குவித்தது. எனினும் முதல் வரிசை விரர் ஓஷத பெர்னாண்டோ இரட்டைச் சதத்தை 4 ஓட்டங்களால் தவறவிட்டார்.

உண்மையான சகலதுறை வீரர் ஒருவர் எப்படி இருக்க வேண்டும்?

இந்நிலையில் முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை இராணுவப்படை கழகத்தின் 6 விக்கெட்டுகளை மலிந்த புஷ்பகுமார வீழ்த்தினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிசுக்காக பலோ ஓன் (follow on) செய்த இலங்கை இராணுவ கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 16 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இன்னும் 369 ஓட்டங்களை எடுக்க வேண்டும்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 545 (118.3) – ஓஷத பெர்னாண்டோ 196, ஷெஹான் ஜயசூரிய 118, சச்சித்ர சேரசிங்க 65, இசுரு உதான 56, ரிசித் உபமால் 41, புலின தரங்க 37, ஜனித் சில்வா 5/114, துஷான் விமுக்தி 2/139

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 160 (49) – சன்ஜிக ரித்ம 35*, கசுன் டி சில்வா 27, நவோத் இலுக்வத்த 20, நுவன் லியனபதிரன 20, மலிந்த புஷ்பகுமார 6/56, அசித பெர்னாண்டோ 3/24

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O – 16/0 (8)  


தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் BRC

கொழும் பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் தமிழ் யூனியன் அணி முதல் இன்னிங்சுக்காக பெற்ற 314 ஓட்டங்களை நோக்கி BRC அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

BRC அணி முதல் 6 விக்கெட்டுகளையும் வெறுமனே 42 ஓட்டங்களுக்கு பறிகொடுத்த நிலையில் ஷஷின் தில்ரங்க மற்றும் சுராஜ் ரந்திவ் 7ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 178 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் BRC அணி 6 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. சுராஜ் ரந்திவ் 93 ஓட்டங்களுடனும் ஷஷின் தில்ரங்க 75 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.   

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 314 (104) – தரங்க பரணவிதான 123, தினெத் திமோத்ய 57, ஷாலிக்க கருனநாயக்க 37, மனோஜ் சரத்சந்திர 33, விகும் சஞ்சய 3/63, ஹிமேஷ் ராமனாயக்க 2/39, சுராஜ் ரந்திவ் 2/81   

BRC (முதல் இன்னிங்ஸ்) – 220/6 (73) – சுராஜ் ரந்திவ் 93*, ஷஷின் தில்ரங்க 75*, பிரமோத் மதுஷான் 4/48


இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

சானக்க கோமசாருவின் அபார பந்துவீச்சால் பதுரெலிய விளையாட்டுக் கழகத்தை 105 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை துறைமுக அதிகார சபை அணி இன்னிங்ஸ் வெற்றிவாய்ப்பை பெற்றுள்ளது.

மக்கொன சர்ரே மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் இலங்கை துறைமுக அதிகார சபை அணி முதல் இன்னிங்சுக்காக 359 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அந்த அணிக்காக சானக்க கோமசாரு 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சுக்காக பலோ ஓன் (follow on) செய்த பதுரெலிய விளையாட்டுக் கழகம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இன்னும் 230 ஓட்டங்களைப் பெற வேண்டும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 359 (100.3) – மதுக லியனபதிரன 115*, பிரஷான் விக்ரமசிங்க 88, கிஹான் ரூபசிங்க 48, ஆதீல் மாலிக் 25, கயான் மனீஷன் 20, யஷோத லங்கா 20, அலங்கார அசங்க 7/79, நிம்னத சுபசிங்க 3/56  

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 105 (56) – சம்மிக்க ருவன் 20, சானக்க கோமசாரு 6/34

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O – 24/1 (14)