கடைசி போட்டியில் வட மாகாணத்திற்கு தோல்வி

406

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (20) நடைபெற்றன.

வட மாகாணம் எதிர் மத்திய மாகாணம்

துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சோபிக்கத் தவறிய வட மாகாண அணி தனது கடைசி குழுநிலைப் போட்டியில் மத்திய மாகாணத்திடம் 9 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட வட மாகாண அணியின் எந்த வீரரும் துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை. இதனால் அந்த அணி 35.1 ஓவர்களில் 81 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

சூரியபண்டாரவின் அபாரத்தால் மேல் மாகாண மத்தி அணிக்கு வெற்றி

மத்திய மாகாண அணியின் நான்கு வீரர்கள் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அதிலும் கல்ஹார சேனாரத்ன 3 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய மாகாண அணி 25 ஓவர்களில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. புபுது பண்டார மற்றும் கஜித கொடுவேகொட ஆட்டமிழக்காது முறையே 36, 34 ஓட்டங்களை பெற்றனர்.

மாகாண அணிகளுக்கு இடையிலான இந்த ஒருநாள் தொடரில் 19 வயதுக்கு உட்பட்ட வட மாகாண அணி இரண்டு வெற்றிகள் இரண்டு தோல்விகளை பெற்று பலமான ஏனைய மாகாணங்களுக்கு எதிராக தமது திறமையை நிரூபித்தது. எனினும் அந்த அணியால் இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.

19 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை (23) கொழும்பு கிரிக்கெட் கழகத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

வட மாகாணம் – 81 (35.1) – கல்ஹார சேனாரத்ன 2/03, ஓசந்த ஹேரத் 2/18, புபுது பண்டார 2/19, நிம்னக்க ஜயதிலக்க 2/24

மத்திய மாகாணம் – 82/1 (25) – புபுது பண்டார 36*, கஜித கொடுவேகொட 34*

முடிவு – மத்திய மாகாண அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி


வட மத்திய மாகாணம் எதிர் வட மேல் மாகாணம்

கட்டுநாயக்க சிலாபம் மேரியன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வட மத்திய மாகாணத்திற்கு எதிரான போட்டியில் வட மேல் மாகாணம் டக்வத் லுவிஸ் முறைப்படி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

தன்மீது சாட்டப்ட்டுள்ள பந்து சேதப்படுத்தல் குற்றச்சாட்டினை மறுக்கும் தினேஷ் சந்திமால்

அடிக்கடி மழை குறுக்கிட்ட இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட வட மத்திய மாகாணம் 38.5 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய இடதுகை சுழல் பந்து வீச்சாளர் கவீன் பண்டார 4 விக்கெட்டுகளை பாதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய வட மேல் மாகாண அணி 34.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறிக்கிட்டது. எனினும் டக்வத் லுவிஸ் முறையில் வெற்றி இலக்கும் 129 ஆக குறைக்கப்பட்டதை அடுத்து வட மேல் மாகாண அணிக்கு வெற்றி கிடைத்தது.

போட்டியின் சுருக்கம்

வட மத்திய மாகாணம் – 138 (38.5) – சமோத் ருவன்வெல்ல 32, அவிஷ்க சேனாதீர 26, கவீன் பண்டார 4/27, கவிந்து ரணசிங்க 2/12

வட மேல் மாகாணம் – 130/7 (34.1) – ஷிஹான் அனுருத்த 30, ஷேஷான் உத்ரார 28*, ருசித் சேனாரத்ன 3/14, அசங்க குலரத்ன 2/29

முடிவு – வட மேல் மாகாணம் 3 விக்கெட்டுகளால் வெற்றி (டக்வத் லுவிஸ் முறை)

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<