இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் நாளை ஆரம்பமாகவிருக்கும் (11), 23 வயதுக்கு கீழ்ப்பட்ட வீரர்களுக்கான மாகாண ரீதியிலான கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளவுள்ள 10 அணிகளிலும் அடங்கும் 150 வீரர்களின் பெயர்ப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வாரியத்தின் மூலம் இன்று (10) வெளிவிடப்பட்டிருக்கும், இந்தப்பட்டியலில் சதீர சமரவிக்ரம, பினுர பெர்னாந்து, சரித் அசலங்க, அசித்த பெர்னாந்து, லஹிரு குமார, அவிஷ்க பெர்னாந்து, சம்மு அஷான் மற்றும் ரொன் சந்திரகுப்தா போன்ற இளம் வீரர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டிகள் அடங்கிய இந்த தொடரில் பங்குபெறும் 10 அணிகளும், இரு குழுக்களாக மோதவுள்ளதோடு ஒன்பது வெவ்வேறு மைதானங்களில் போட்டிகள் அனைத்தும் நடைபெறவுள்ளன. அத்தோடு, தொடரின் இறுதிப்போட்டி சர்ரே மக்கோன கிராம மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு

இம்மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி இலங்கை அணியுடன்..

இத்தொடரில் பங்கு கொள்ளும் ஊவா, கிழக்கு மற்றும் வட மாகாண அணிகளில் குறைந்தபட்சமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த தலா 3 வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அண்மையில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகளில் பிரகாசித்த யாழ் மத்திய கல்லூரி வீரர் மதுஷன் எந்தவொரு அணியிலேனும் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குழு A குழு B
மத்திய மாகாணம் மேல் மாகாணம் (தென் பிராந்தியம்)
வடமேல் மாகாணம் மேல் மாகாணம் (வட பிராந்தியம்)
மேல் மாகாணம் (மத்திய பிராந்தியம்) கிழக்கு மாகாணம்
வட மாகாணம் தென் மாகாணம்
வட மத்திய மாகாணம் ஊவா மாகாணம்

அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் விபரம்

மேல் மாகாணம் (மத்திய பிராந்தியம்) – சதீர சமரவிக்ரம, ஹிமாஷ லியனகே, சரித் மெண்டிஸ், ஹஷான் துமிந்து, அகீல் இன்ஹாம், ஜனித் லியனகே, விஷாத் ரந்திக்க, சமின்த மதுரங்க, லஹிரு விமுக்தி, மனேல்கர் டி சில்வா, அனுக் பெர்னாந்து, ரொஷான் அனுருத்த, திஷ்னக்க மனோஜ், லசித் எம்புல்தெனிய, சஹன் நாணயக்கார

மேல் மாகாணம் (வட பிராந்தியம்) – சலிந்த உஷான், கவின் பண்டார, பத்தும் நிஸ்ஸங்க, லக்‌ஷின ரொட்ரிகோ, சம்மு அஷான், குசல் எதிரிசூரிய, மலிங்க அமரசிங்க, சஹன் ஆராச்சிகே, சரண நாணயக்கார, இர்ஷாத் உமர், பினுர பெர்னாந்து, அதீஷ அப்புஹாமி, நுவன் துஷார, நிஷான் பீரிஸ், துவிந்து திலகரட்ன

மேல் மாகாணம் (தென் பிராந்தியம்) – ரஷ்மிக்க ஓபாத, மின்ஹாஜ் ஜலில், திமிர ஜயசிங்க, மாதவ நிமேஷ், பிரமோத் மதுவந்த, தருஷன் இட்டமல்கொட, மலிந்து மதுரங்க, சந்தகன் பத்திரன, பவன் டயஸ், பசன் ஹெட்டியராச்சி, ரனிதா லியனாரச்சி, மிஷென் சில்வா, லக்ஷித மானசிங்க, ரவிந்து திலகரட்ன

தென் மாகாணம் – லசித் லக்ஷான், ரமிந்த விஜேசூரிய, சரித் அசலன்க, சித்தார கிம்ஹான், ரமேஷ் மெண்டிஸ், பசிந்து இஷிர, துலாஷ் உதயங்க, ரமிந்து நிகேஷல, அதீஷ திலன்ச்சன, திஷார பாணுக்க, தில்ஷான் சந்தருவன், சஜித் சங்கல்ப, இஷார பிரஷான், மலித் மஹேல டி சில்வா, தில்ஷான் டி சொய்ஸா

மத்திய மாகாணம் – ரொன் சந்திரகுப்தா, மொஹமட் அல்பர், ரவீன் சாயர், திலான் ஜயலத், தனுக்க தாபரே, நிமேஷ குணசிங்க, நுவனிந்து பெர்னாந்து, லஹிரு சமரகோன், சரித் சுதாரக்க, மொஹமட் சிராஸ், நிமேஷ மெண்டிஸ், லஹிரு குமார, சனோகீத் சண்முகநாதன், லக்கன ஜயசேகர, பிரமோத்ய அபயகோன்

இந்தியாவை அதிர வைத்த எவின் லுவிஸ் : T-20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்

இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு T-20 போட்டியில் எவின் லுவிஸின் அதிரடி சதத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள்..

ஊவா மாகாணம் – யெஷான் விக்கிரமராச்சி, லிசுல லக்‌ஷான், ஹஷான் விமர்சன, இவன்க சஞ்சுல, நவிந்து நிர்மல், ஹர்ஷ ராஜபக்ஷ, மொஹமட் ஷமாய், D குணசேகர, M தினேத், P ஜயமன்ன, S கோபிநாத், அஷென் அஞ்சன, பிரவீன் கமகே, பியுமல் அத்தநாயக்க, மஞ்சுல பிரசான்ஜித்

வட மேல் மாகணம் – கேஷன் வன்னியராச்சி, லியோ பிரான்சிஸ்கோ, மினோத் பாணுக்க, துலாஜ் ரணதுங்க, ருக்ஷான் பெர்னாந்து, சஜிந்த பீரிஸ், சச்சின் தில்ரங்க, சச்சின் ஜயவர்தன, அரவிந்த அகுருகொட, அசித்த பெர்னாந்து, ஷெஹான் மதுசங்க, அன்டன் பெர்னாந்து, தரிந்து ரத்னாயக்க, ராஜிக தில்ஷான், அவிஷ்க பெர்னாந்து

கிழக்கு மாகாணம் – நிப்புன கமகே, துஷான் கவிந்த, திமந்த ரனுஷ், சஞ்சிக்க ரித்ம, சஜித்ர ஜயதிலக்க, மிதுன் சரித், A அஷ்லிஷாந்த, ரமேஷ் நிமந்த, R தேனுதரன், நிமேஷ் விமுக்தி, பிரசன்ன சுஜித், AM றபாஸ், M சாருகன், K தனுஷாந்த், வொஷந்த டி சில்வா

வட மத்திய மாகாணம் – தினேத் திமோத்ய, யொஹான் மெண்டிஸ், சந்தீப்ப நிஸ்ஸங்க, கவிந்து மதரசிங்க, ஹெலக்கமல் நாணயக்கார, சுபுன் விதானாரச்சி, அஜித் சந்தருவன், ஆகாஷ் சேனாரத்ன, பிரமோத் சாலுக்க ஹெட்டிவட்டே, சத்துரங்க அபேயசிங்க, கசுன் வீரங்க, சந்துல வீரரத்ன, சச்சின் பண்டார, ஜகத் சந்தருவன்

வட மாகாணம் – றிசித் உப்பமல், ரெவான் கெல்லி, சலித்த பெர்னாந்து, லக்ஷன் ஜயசிங்க, திலான் நிமேஷ், தருஷ பெர்னாந்து, D டார்வின், ராஜூ கஜநாத், A அஞ்சயன், R ரஜீவன், பராக்கிரம தென்னக்கோன், கனகரத்தினம் கபில்ராஜ், G ரதிசன், சுஜன் மெயாஸ், V ஜதுசன்