கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றிய அம்ஷி

106

இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கழகமட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 23 வயதுக்குட்பட்ட உள்ளூர் கழக அணிகள் மோதும் மேஜர் யூத் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் நான்காவது வாரத்துக்காக இன்று (23) மொத்தமாக 07 போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

இதில் பெரும்பாலான போட்டிகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டதுடன், ஆகிய கொழும்பு கிரிக்கெட் கழகம், விமானப்படை விளையாட்டுக் கழகம், SSC, செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம், சோனகர் விளையாட்டுக் கழகம், பதுரெலிய கிரிக்கெட் கழகம், இராணுவ கிரிக்கெட் கழகம், காலி கிரிக்கெட் கழக அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்தன.

நுவனிதுவின் சதத்தினால் SSC வெற்றி, சமாஸ் பொறுப்பான ஆட்டம்

கொழும்பு சி.சி.சி மைதானத்தில் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்துடன் நடைபெற்ற போட்டியானது சீரற்ற காலநிலை காரணமாக அணிக்கு 45 ஓவர்களைக் கொண்டதாக மட்டுப்படுத்தப்பட்டதுடன், போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குருநாகல் இளையோர் அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 106 ஓட்டங்களுக்கு சுருண்டது.

பந்துவீச்சில் கொழும்பு கழகத்தின் வேகப்பந்துவீச்சாளர் அம்ஷி டி சில்வா 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக நடைபெற்ற ப்ளும்பீல்ட் கழகத்துடனான போட்டியிலும் 12 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை அம்ஷி டி சில்வா கைப்பற்றியிருந்தார்.

இதன்படி, இம்முறை மேஜர் லீக் ஒருநாள் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முடிவில் 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள அம்ஷி டி சில்வா, அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

பின்னர் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸின் போது மழை குறுக்கிட கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு 36 ஓவர்களுக்கு 99 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. 

Video – டோனி, கோஹ்லி, டிவில்லியர்ஸின் முத்தான சாதனைகள் |Sports RoundUp – Epi 133

எனினும் அந்த அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

குழு A இற்கான மோதல் ஒன்றில் இராணுவ கிரிக்கெட் கழகம், கடற்படை கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 62 ஓட்டங்களால் வெற்றி பெற்று இந்தத் தொடரில் தமது நான்காவது வெற்றியினைப் பதிவு செய்தது. 

இராணுவ கழகத்தின் வெற்றிக்காக துடுப்பாட்டத்தில் பிஷான் மெண்டிஸ் சதம் கடந்து 104 ஓட்டங்களை எடுத்தார்.

இதேநேரம் நுகேகொடை விளையாட்டுக் கழகம் மற்றும் பதுரெலிய கிரிக்கெட் கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில், பதுரெலிய கிரிக்கெட் கழகம் 2 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்தது.

இதனிடையே, SSC மற்றும் தமிழ் யூனியன் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் 200 இற்கு அதிகமான ஓட்டங்களை எடுத்தது.

49 வருடங்களில் 4 தடவைகள் மாத்திரம் பதிவாகிய அரிய சாதனை!

எனினும், டக்வத் லூவிஸ் முறைப்படி 222 ஓட்டங்களை துரத்திய SSC கழகம், 62 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.

அந்த அணிக்காக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவரான நிபுன் தனன்ஞய அரைச்சதம் கடந்து 62 ஓட்டங்களை எடுத்தார். 

போட்டிகளின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை வி.க.

(விமானப்படை மைதானம், கட்டுநாயக்க)

லங்கன் கிரிக்கெட் கழகம் – 148 (43.4) – கெவின் பெரேரா 29, தமித் சில்வா 27, சவன் கன்கனாங்கே 21, கசுன் ஏக்கநாயக்க 3/31, ரவிந்து செம்பகுட்டிகே 2/11, கசுன் ரவிந்து 2/23, மொவின் சுபசிங்க 2/28

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 139/6 (39.4) ரவிந்து செம்பகுட்டிகே 67*, மொவின் சுபசிங்க 23*, சாமிக்கர ஹேவகே 22, சந்துன் சத்ஸர 4/31, யசிரு ரொட்ரிகோ 2/31

முடிவு – விமானப்படை விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

(பி.சரா ஓவல் மைதானம், கொழும்பு)

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 235/10 (49) – ரவிந்து பெர்னாண்டோ 56, கமேஷ் நிர்மால் 47, கவிந்து மதரசிங்க 45, ஹிமேஷ் ராமநாயக்க 3/47, கலன பெரேரா 2/38

SSC – 223/6 (45.4) – நிபுன் தனன்ஞய 62, சம்மு அஷான் 45*, க்ரிஷான் சன்ஜுல 45, சமிந்து விக்ரமசிங்க 40, ரவீன் டி சில்வா 2/26, சச்சின்து கொலம்பகே 2/38

முடிவு – SSC கழகம் 4 விக்கெட்டுக்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)


செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

(பொலிஸ் பார்க் மைதானம், கொழும்பு) 

செபஸ்டியன் கிரிக்கெட் கழகம் – 170 (49.1) – தரூஷ பெர்னாண்டோ 46, தரூஷ சமரவிக்ரம 23, ரயன் பெர்னாண்டோ 23, மொஹமட் பாஹிம் 3/10, சாருக்க ஜயதிலக்க 3/39, ரெசண்டு திலகரத்ன 2/26

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 132 (40.3) – பவன்த உடன்கமுவ 29, லக்ஷpத அமரசேகர 27, ஹசிந்து சாமிக்க 22, தரூஷ பெர்னாண்டோ 4/24, தரூஷ சமரவிக்ரம 2/20, ஹன்ச டி சில்வா 2/25

முடிவு – செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் 34 ஓட்டங்களால் வெற்றி (டக்வெத் லூயிஸ் முறையில்)


கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

(காலி கிரிக்கெட் மைதானம், காலி)

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 130/8 (23) – சசித் மனுரங்க 28, சசித் ப்ரியால் 25, தனுல சமோத் 2/23, குஷhன் மதூஷ 2/23

காலி கிரிக்கெட் கழகம் – 124/6 (22) – ரவிஷ்க விஜேசிறி 44, கவிந்து எதிரிவீர 33, இமேஷ் மதுஷங்க 3/12

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 2 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூவிஸ் முறையில்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<