இரண்டாவது டெஸ்டுக்கான இலங்கை அணியில் அசித பெர்னாண்டோ

Pakistan tour of Sri Lanka 2023

305

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் வேகப் பந்துவீச்சாளரான அசித பெர்னாண்டோ இணைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் லஹிரு திரிமான்ன!

வேகப் பந்துவீச்சாளரான அசித பெர்னாண்டோ காலியில் நடைபெற்ற இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் காய்ச்சல் காரணமாக பங்கேற்றிருக்கவில்லை.

இந்த நிலையில் அசித்த பெர்னாண்டோ தற்போது உடல்நிலை தேறியிருப்பதோடு, பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (24) திங்கட்கிழமை கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் அசித்த பெர்னாண்டோ இலங்கை பதினொருவர் குழாத்தில் உள்ளடக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையில் நடைபெற்று வரும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<